""மக்களுக்கு நல்லது நடந்தால் கருணாநிதியால் பொறுக்க முடியாது"": ஜெ. சூடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாட்டு மக்களுக்கு நல்லது எது நடந்தாலும் அது திமுக தலைவர் கருணாநிதிக்குப் பொறுக்காது என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.

ரூ.720 கோடி மதிப்பிலான புதிய வீராணம் திட்டத்தைத் தொடக்கி வைத்து ஜெயலலிதா பேசுகையில்,

ஒரு காலத்தில் வீராணம் என்றால் கடல் போல் பரந்து விரிந்த ஏரிதான் மனக்கண் முன் வந்தது. ஆனால் அண்மைக்காலத்தில் வீராணம் என்றாலே ஊழல்தான் நினைவுக்கு வரும். இது காலத்தின் கோலமா? இதற்குப் பெயர்தான் கலிகாலமா?

சென்னைக்கு குடிநீர் தரமுடியாது என்று கடலூர் மாவட்டத்தில் உள்ளவர்களே மறுத்தால், தமிழகத்திற்கு காவிரியில்கர்நாடகம் எப்படி நீர் கொடுக்கும்? நாம்தான் எப்படிக் கேட்க முடியும்?

இந்தப் புதிய வீராணம் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றுஎதிர்க் கட்சியினர்தான் தவறான பிரச்சாரத்தைத் தூண்டி விடுகின்றனர்.

ஆனால் கடலூர் மாவட்ட விவசாயிகளின் சந்தேகத்தையும், அச்சத்தையும் போக்க வேண்டிய கடமை எனக்குஉள்ளது.

வீராணம் ஏரியின் முழு நீர்மட்ட அளவு தற்போதுள்ள 45.5 அடியிலிருந்து 47.5 அடியாக உயர்த்தப்படும். பின்னர்அதில் 39 அடிக்கு மேல் உள்ள நீர் மட்டும்தான் சென்னைக்குக் குடிநீராக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

எனவே விவசாயப் பாசனம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்பதுதான் தொழில்நுட்ப ரீதியிலான உண்மை.அதைத் தெரிந்து கொள்ளாமல் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி அவர்களைத் திசை திருப்பவேண்டும் என்று எதிர்க் கட்சிகள் முயற்சித்து வருகின்றனர்.

ஊரைக் கெடுத்தவர்கள், நாட்டைக் கெடுத்தவர்கள் என்று இவ்வுலகில் இருக்கிறார்கள். ஆனால் ஒரு இடத்தின்பெயரைக் கெடுத்தவரும் இங்கு உள்ளார்.

வீராணம் என்பதற்கு வேறு பொருள் பெற்றுத் தந்த அந்த வீரர் யார் என்று சகலரும் அறிவார்கள். சர்க்காரும்அறியும், சர்க்காரியாவும் அறிவார். அவர்தான் கருணாநிதி.

நாட்டு மக்களுக்கு நல்லது ஏதாவது நடந்தால் அதை கருணாநிதியால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.அதனால்தான் அவருடைய வீட்டுக்குள்ளே இன்று வெட்டு, குத்து நடக்கிறது என்றார் ஜெயலலிதா.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+