நாகப்பா கடத்தல்: வீட்டிற்குள்ளேயே சதியா?- நீதிபதி சந்தேகம்
பெங்களூர்: சந்தனக் கடத்தல் வீரப்பனால் கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்படுவதற்கு முன் அவருடையவீட்டிலேயே கடத்தல் சதி நடந்திருப்பதாக இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கமிஷனின் தலைவர் நீதிபதிவைத்தியநாதன் கூறினார்.
நாகப்பா கடத்தல் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தனி நபர் விசாரணைக் கமிஷன் தன்னுடையவிசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது.
நீதிபதி வைத்தியநாதன் முதலில் நாகப்பாவின் வீட்டில் விசாரணை நடத்தினார். அவருடைய வீட்டைமுழுவதுமாகச் சுற்றிப் பார்த்த நீதிபதி, அவ்வீட்டில் உள்ளவர்களிடமும் நாகப்பா கடத்தலை நேரடியாகப்பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தினார்.
பின்னர் நாகப்பா பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட செங்கடி காட்டுப் பகுதிக்கும் நீதிபதி சென்று பார்த்தார். அங்குதுப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம்கூறுகையில்,
நாகப்பாவை வீரப்பன் கடத்துவதற்கு முன்பே அவருடைய வீட்டில் இதற்கான சதி நடத்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
நாகப்பா வீட்டுக் கதவைப் பலமுறை தட்டியும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக வீரப்பன் வீட்டுக்குள்நுழைந்துள்ளான். ஆனால் ஜன்னல் உடைக்கப்பட்டதற்கான எந்தவிதமான அறிகுறியும் அதில் இல்லை.
ஜன்னலின் ஒரு ஆணியோ அல்லது ஸ்குரூவோ கழன்று போனதாகவும் தெரியவில்லை. இதனால் யாரோ திட்டம்போட்டே ஜன்னல் வழியாக வீரப்பன் உள்ளே நுழைவதற்கு வசதியாக அது வைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.இது எனக்குப் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்ததாக காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டகுண்டுகளைப் பரிசோதனை செய்ய வேண்டும். அவை தமிழக அதிரடிப்படையினருடைய ஏ.கே. 47 துப்பாக்கியில்பயன்படுத்தப்பட்டவையா அல்லது கர்நாடக அதிரடிப்படையினருடையதா என்பது குறித்து இனிமேல்தான்ஆராய வேண்டும்.
இதற்காக தமிழக அரசிடமிருந்து நான் முதலில் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றால்தான்தமிழப் போலீசாரை நேரடியாக விசாரிக்க முடியும். ஆனால் அனுமதி கிடைக்குமா என்பது குறித்து என்னால்இப்போது எதுவும் கூறமுடியாது என்றார் நீதிபதி வைத்தியநாதன்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications