வீரப்பன் கும்பலில் கும்பகோணம் வாலிபர்
சென்னை:
வீரப்பன் கும்பலுடன் சேர்ந்து கர்நாடக முன்னாள் அமைச்சரைக் கடத்தியதில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய புள்ளிக்கும்தொடர்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர் தலைமறைவாகிவிட்டதால் இவரைப் பிடிக்க தனிப் படைகள்அமைக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம் சாந்தம்பாடியைச் சேர்ந்த இந்த நபரின் பெயர் சேதுமணி (வயது 25). நாகப்பாவை வீரப்பன் கடத்திய போதுஅந்தக் குழுவில் சேதுமணியும் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நாகப்பா கடத்தில் தொடர்பாக தமிழகத்திலும்கர்நாடகத்திலும் பிடிபட்ட 12 பேரிடமும் அதிரடிப்படையினர் நடத்திய விசாரணையில் இந்த சேதுமணி குறித்துத் தெரியவந்தது.
நாகப்பா கொலைக்குப் பிறகு வீரப்பன் கும்பல் பல குழுக்காகப் பிரிந்ததாகவும் இதில் சேதுமணி மீண்டும் கும்பகோணத்துக்கேதிரும்பிவிட்டதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து சேதுமணியைப் பிடிக்க கும்பகோணம் போலீசார் முயன்றனர். ஆனால், அதற்குள் சேதுமணிதலைமறைவாகிவிட்டார். நாகப்பாவை வீரப்பன் கடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் சேதுமணி, வீரப்பன் கும்பலில்சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
நாகப்பாவை வீரப்பன் கடத்தத் திட்டம் போட்டதே இந்த சேதுமணி தான் என்று தெரியவந்துள்ளது.
தலைமறைவாகிவிட்ட சேதுமணியைப் பிடிக்கும் பணியில் தமிழக போலீசாரும் அதிரடிப்படையினரும் தீவிரமாகஈடுபட்டுள்ளனர். இதற்காக தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications