புது வீராணம்: அதிமுகவை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புது வீராணம் திட்டத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் பாரதீய ஜனதாக் கட்சியின் விவசாய அணியினர் வரும்10ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் அகில இந்திய செயலாளரான இல. கணேசன்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கணேசன் விடுத்துள்ள அறிக்கையில்,

அதிமுக அரசின் நல்ல திட்டங்களை, மக்களுக்குப் பலன் தரும் திட்டங்களைப் பாராட்டியே வந்துள்ளோம்.இனியும் பாராட்டத் தயங்க மாட்டோம்.

ஆனால் ஒருவருக்குப் பலனும், இன்னொருவருக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தும் திட்டத்தை நாங்கள் கண்டிப்பாகஆதரிக்க மாட்டோம்.

வீராணம் ஏரியிலிருந்து சென்னை நகருக்கு தண்ணீர் கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும் கூட, இதனால்வீராணம் ஏரியை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதை அனுமதிக்க முடியாது.

எனவே புது வீராணம் திட்டத்தைக் கைவிடக் கோரி அரசை வலியுறுத்தி விவசாய அணியினர் போராட்டம் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவ்வறிக்கையில் கணேசன் கூறியுள்ளார்.

எதிர்க் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தங்களுக்கு திமுக அழைப்பு விடுக்காததைத் தொடர்ந்து பா.ஜ.க.கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வர ஆரம்பித்துள்ளது.

பரிதி மீதான நடவடிக்கைகளை சட்டசபையில் கண்டிக்காத பா.ஜ.க., எதிர்க் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்படாததைத் தொடர்ந்து பரிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் புது வீராணம் திட்டத்தையும் எதிர்த்து போராட்டம் நடத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+