காவிரி: தமிழக, கர்நாடக அரசுகளுக்கு வாஜ்பாய் வேண்டுகோள்
டெல்லி:
தமிழகமும் கர்நாடகமும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, பேசி ஒற்றுமையுடன் இருந்து காவிரிப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
2003ம் ஆண்டை "சுகாதார தண்ணீர் ஆண்டாக" அறிவித்து டெல்லியில் நடைபெற்ற விழாவில் வாஜ்பாய்பேசுகையில்,
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடகத்திடமிருந்து தமிழகம் நீர் கேட்பது நியாயம்தான். அதே நேரத்தில்தன் மாநிலத்தைக் காப்பதற்காக தமிழகத்திற்கு நீர் திறந்துவிட மாட்டோம் என்று கர்நாடகம் கூறுவதைத் தவறுஎன்றும் கூறிவிட முடியாது.
இப்பிரச்சனையில் இந்த இரு மாநிலங்களுக்கும் இடையில் நாங்கள்தான் மாட்டிக் கொண்டு விழித்துக் கொண்டுநிற்கிறோம்.
காவிரிதான் இந்த இரு மாநிலங்களையும் ஒன்று சேர்க்கிறது. எனவே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில்இருவரும் வீம்பு பிடிக்கக் கூடாது.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காவிரிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தமிழகமும், கர்நாடகமும் முன்வரவேண்டும். மத்திய அரசும் முடிந்த வரையில் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறதுஎன்றார் வாஜ்பாய்.
"என்னுடைய 50 ஆண்டு கால அரசியல் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். எந்த ஒரு நீர் பிரச்சனைக்கும் தீர்வுகிடைக்கும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை" என்று வாஜ்பாய் கூறியபோது விழா அரங்கமேசிரிப்பலையால் அதிர்ந்தது.
வரும் 10ம் தேதி வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் கூடவுள்ள நிலையில் காவிரி விவகாரம்குறித்து அவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகம் மீண்டும் "திமிர்" மனு:
இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்திற்குஉத்தரவிடக் கோரி தமிழக அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கர்நாடக அரசு பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதற்காக காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடைபெறும் தேதியைஉடனடியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி உச்ச நீதிமன்றம்ஆணையிட்டது.
அதற்கு மறுநாளே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. கர்நாடக அணைகளில்உள்ள நீரின் அளவைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற அம்மாநில அரசு 10டி.எம்.சி. நீரையாவது உடனடியாகத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
இதற்குப் பதில் மனு ஒன்றை நேற்று கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அம்மனுவில்,
கர்நாடக அணைகளில் மொத்தம் 22.49 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது. ஆனால் 12.47 டி.எம்.சி. நீரை மட்டுமேபயன்படுத்த முடியும். அந்த நீரும் அணைப் பகுதிகளில் உள்ள பயிர்களுக்கும், விலங்கினங்களுக்கும்தேவைப்படுகிறது.
எனவே நீர் திறந்து விடக் கோரும் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இனி தமிழகத்திற்கு நீர்திறந்து விட முடியாது என்று அம்மனுவில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாகஇருந்தது. ஆனால் இவ்வழக்கை விசாரிப்பவர்களில் ஒருவரான நீதிபதி காரேவுக்கு உடல்நலக் குறைவுஏற்பட்டதால் இன்று அது விசாரணைக்கு வரவில்லை. இவ்வழக்கு தொடர்பான விசாரணை நாளை நடைபெறும்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications