மாஜி அமைச்சரின் மனைவி கல்லூரிக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு
சென்னை:
முன்னாள் அமைச்சர் தம்பித்துரையின் மனைவி பானுமதியின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அதியமான்பொறியியல் கல்லூரிக்கு தமிழக அரசு வழங்கியுள்ள நிலச்சலுகை உத்தரவை சட்ட விரோதமானது என்றுஅறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமாக 216 ஏக்கர் நிலம்உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் தனியார் சுயநிதிக் கல்லூரிகள் அதிகபட்சம் 25 ஏக்கர் அளவுக்குத்தான் நிலம் வைத்துக் கொள்ள வேண்டும்என்று தமிழக அரசின் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அதியமான் கல்லூரிக்கு சலுகை வழங்கி தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் இதேபோல கூடுதல் நிலங்கள் வைத்துள்ள பிற தனியார் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துஅண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது என்று கூறி ஏற்கனவே ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதுஉயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சுவாமிநாதன் என்பவர் புதுவழக்குப் போட்டுள்ளார். அவரும் இதே காரணத்தையே தனதுமனுவில் கூறியுள்ளார். ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை என தர்மபுரி மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளில் 216 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை அதியமான் பொறியியல் கல்லூரி வைத்துள்ளது.
அரசின் அதிகபட்ச நிலப்பரப்பான 25 ஏக்கர் என்ற அளவை விட பல மடங்கு அதிக நிலம் வைத்துள்ள அதியமான்கல்லூரிக்கு நிலச் சலுகை வழங்கி கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி தமிழக அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது. இதை அண்ணா பல்கலைக்கழகமும் அனுமதித்துள்ளது.
ஆனால் இதேபோல கூடுதல் நிலம் வைத்திருந்த பிற தனியார் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை நிலச்சீர்திருத்த சட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
எனவே அதியமான் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அரசு சலுகை சட்ட விரோதமானது, செல்லாது என்று நீதிமன்றம்அறிவிக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை ஆய்வு செய்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,அதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசு, அகில இந்திய பொறியியல் கல்விக் கழகம், அண்ணாபல்கலைக் கழகம், பானுமதி தம்பித்துரை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications