சென்னை அருகே மீண்டும் வானில் வட்டமிட்ட அமெரிக்க விமானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே 100 கடல் மைல் தொலைவில் மீண்டும் அமெரிக்க விமானம் ஒன்று வானில் அத்துமீறிப்பறந்தது.

கடந்த சில நாட்களாக அமெரிக்க விமானங்கள் இந்திய எல்லைப் பகுதிகளுக்குட்பட்ட வான் பகுதிகளில்அத்துமீறிப் பறந்து வருகின்றன.

கடந்த ஜனவரி 31ம் தேதி சென்னை கடல் பகுதியில் அமெரிக்க விமானம் ஒன்று பறந்ததை சென்னையில் உள்ளராடார் கருவிகள் கண்டுபிடித்தன. உடனடியாக தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அவ்விமானத்துடன் தொடர்புகொண்டன.

ஆனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் வட்டமிட்ட அந்த விமானம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திற்கு பதில் ஏதும் சொல்லாமலேயே பறந்து போய்விட்டது. கல்பாக்கம் அணு மின்நிலையத்தை அவ்விமானம் உளவு பார்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து மாலத்தீவுகளுக்குச் சென்ற அமெரிக்க விமானம்ஒன்று மும்பையின் வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது இந்திய விமானப் படையினர் அதை மடக்கினர்.

தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்தே அந்த அமெரிக்க போயிங் சரக்கு விமானம் மும்பை விமான நிலையத்தில்வலுக்கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த 11 விமான ஊழியர்களையும் மத்திய உளவுத் துறைஅதிகாரிகள் துருவித் துருவி விசாரித்தனர்.

பாகிஸ்தான் விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்தான் அவர்களுக்குத் தவறான பாதையைக்காட்டிவிட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பாகிஸ்தான் மீது சர்வதேச விமானப் போக்குவரத்துஅமைப்பிடம் புகார் செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று மீண்டும் அமெரிக்க விமானம் ஒன்று அத்துமீறிப் பறந்ததை ராடார்கள்கண்டுபிடித்தன.

சென்னை அருகே கடல் பகுதியில் சுமார் 100 கடல் மைல் தொலைவில் அந்த விமானம் வட்டமிட்டுப் பறந்துகொண்டிருந்ததைக் கண்ட தரைக் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் அதனுடன் தொடர்பு கொண்டனர்.

ஆனால் அந்த அமெரிக்க விமானம் பதில் ஏதும் சொல்லாமலேயே வேகமாக இந்திய வான் எல்லையை விட்டுப்பறந்து சென்று விட்டது. நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அவ்விமானம் அப்பகுதியில்வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

நேற்று மட்டுமல்லாமல் கடந்த 2ம் தேதி மற்றும் 3ம் தேதியும் கூட அமெரிக்க விமானம் இந்திய எல்லையில்பறந்ததாகக் கூறப்படுகிறது.

வான்வெளி பாதுகாப்பு அதிகரிப்பு:

இதற்கிடையே தொடர்ந்து அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து அத்துமீறிப் பறப்பதையடுத்து சென்னையில்வான்வெளிப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் இதைத் தெரிவித்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+