தலித்துகளை அவமதிக்கும் வழக்கு: சங்கராச்சாரியார் மீதான மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தலித்துகளை அவமதித்துப் பேசியதாக காஞ்சி சங்கராச்சாரியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்யமூர்த்தி என்பவர் பொது நலன் மனுஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில்,

கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி சங்கராச்சாரியார் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில்தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் குறித்து அவர் கூறியிருந்த கருத்துக்கள் அந்த சதாயத்தினரின் மனதைபெரிதும் வருத்தி விட்டன.

இந்த சமுதாய மக்களை சங்கராச்சாரியார் அவமதித்து விட்டார். மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில்சங்கராச்சாரியாரின் அறிக்கை அமைந்திருந்தது.

எனவே சங்கராச்சாரியார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தன் மனுவில் சத்யமூர்த்திகோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் அவர்பாதிக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக உத்தரவிட முடியாது என்று கூறி சத்யமூர்த்தியின் மனுவைத்தள்ளுபடி செய்தார்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+