மதுரை உயர் நீதிமன்ற கிளை கட்டுமான பணியில் ஊழல்?
மதுரை:
மதுரை உலகனேரி பகுதியில் கட்டப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளைக் கட்டடத்தை ஊழல் ஒழிப்புப்பிரிவு போலீஸார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
உயர் நீதிமன்றக் கிளைக் கட்டடத்தின் கட்டுமானப் பணியில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்தபுகாரையடுத்து இந்த விசாரணை நடந்தது. சில பொதுப்பணித் துறை பொறியாளர்களிடமும் விசாரணைநடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
ரூ.44 கோடி நிதியை இந்தக் கட்டுமானப் பணிக்காக தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. ஆனால் அந்த அளவுக்குத்தரமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று புகார்கள் கிளம்பின.
மேலும், ஒப்பந்த காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படவில்லை என்றும் ஊழல் புரிவதற்காகவே கட்டுமானப்பணிகள் தாமதமடைந்து வருவதாகவும் ஊழல் தடுப்புப் பிரிவுக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்தே இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது முக்கால் வாசிக்கும்மேல் தயாராகிவிட்ட மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் கட்டடத்தை ஊழல் தடுப்புப் போலீசார் பார்வையிட்டனர்.
கட்டடத்தின் தரத்தை சோதிப்பதற்காக அதன் சில சாம்பிள்களை எடுத்து ஆய்வுக்கு அனுப்பவும் ஊழல் தடுப்புபோலீஸார் முடிவு செய்துள்ளனர்.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின் முடிவில்தான் உயர் நீதிமன்ற கிளைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications