சென்னை அருகே முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்: ஒருவர் குத்திக் கொலை- நகை, பணம் கொள்ளை
சென்னை:
சென்னை அருகே ஒரு வீட்டுக்குள் புகுந்த 20க்கும் மேற்பட்ட முகமூடிக் கொள்ளையர்கள் அங்கிருந்த ஒருவரைப்படுகொலை செய்துவிட்டு, பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துச்சென்றனர்.
சென்னையை அடுத்த சோழாவரத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் நேற்று இரவு தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
நள்ளிரவுக்கு மேல் அந்த வீட்டுக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள், வடிவேலுவை எழுப்பி, பீரோ சாவியைக்கொடுத்து விடுமாறு மிரட்டினர். அவர்கள் தங்கள் கைகளில் கத்தி, துப்பாக்கி, அரிவாள், கம்பி, உருட்டுக் கட்டைஉள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர்.
ஆனால் சாவியைக் கொடுக்க வடிவேல் மறுக்கவே, அவரையும் அவருடைய மனைவியையும் முகமூடிக்கொள்ளையர்கள் உருட்டுக் கட்டையால் தலையில் அடித்தனர்.
அவர்கள் இருவரும் தலையிலிருந்து ரத்தம் வழிய மயங்கிக் கீழே சாய்ந்ததும் பீரோவை உடைத்தகொள்ளையர்கள், அதிலிருந்த தங்க நகைகளையும், பணத்தையும் அள்ளிக் கொண்டு சென்றனர்.
இதற்குள் சத்தம் கேட்டு வந்த வடிவேலுவின் மாமியாரையும் கொள்ளையர்கள் பயங்கரமாகத் தாக்கினர். இதில்அவருடைய கை ஒடிந்து ரத்தம் கொட்டியது. பின்னர் கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.
இதற்கிடையே கூக்குரல் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஓடி வந்து பார்த்தபோது,வடிவேலு உள்ளிட்ட மூவரும் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.
அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து விட்டு, வடிவேலு வீட்டின் மாடிப்பகுதிக்கு மக்கள் விரைந்தனர். அப்போதுதான் வடிவேலுவின் தம்பியான பாலகணேசன் அங்கு கொலைசெய்யப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது.
பாலகணேசனைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த பின்னர்தான் கொள்ளையர்கள் கீழே சென்றுவடிவேலுவையும் மற்றவர்களையும் தாக்கிவிட்டு நகை, ணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து போலீசார் மோப்ப நாயுடன் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்டநகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர்கள் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொள்ளையர்கள் இந்தியில் பேசிக் கொண்டிருந்ததாக வடிவேலுவின் மாமியார் தெரிவித்தார். இதனால்வடநாட்டிலிருந்து வந்த கொள்ளைக் கும்பல்தான் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications