சென்னையை ஒளி வெள்ளத்தில் மூழ்கடிக்க மாநகராட்சி திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரின் முக்கிய சாலைகளில் அதிக பிரகாசம் கொண்ட மின்சார விளக்குகளைப் பொருத்த மாநகராட்சிதிட்டமிட்டுள்ளது.
அண்ணாசாலை, பெரியார் சாலை, ராஜாஜி சாலை, பிராட்வே, பாரிமுனை, மாதவரம் நெடுஞ்சாலை உள்ளிட்ட 15இடங்களில் இந்த விளக்குகள் பொருத்தப்படும்.
ஏற்கனவே 56 இடங்களில் இந்த பிரகாசமான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் விபத்துக்களைத் தவிர்க்கவும், வெளிச்சத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்கு ரூ.1 கோடி செலவாகும் என்றுமதிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர 20 முக்கிய தெருக்களில் பிரகாசமான தெரு விளக்குகளைப் பொருத்தவும் சென்னை மாநகராட்சிதிட்டமிட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications