வீரப்பனுக்கு கோபால் ரூ.5 கோடி எடுத்து சென்றார்: தினகர்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக 2 முறை ரூ.5 கோடிப் பணத்தை "நக்கீரன்" கோபால் எடுத்துச் சென்றது100 சதவீத உண்மை என்று கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. தினகர் கூறினார்.
ராஜ்குமார் எப்படி கடத்தப்பட்டார், பின்னர் அவர் எப்படி மீட்கப்பட்டார், இதற்காக என்ன என்ன நடவடிக்கைகள்எடுக்கப்பட்டன என்பது குறித்து அந்த சமயத்தில் டி.ஜி.பியாக இருந்த தினகர் புத்தகம் எழுதியுள்ளார்.
அதில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, கோபால், கிருஷ்ணாவின் மருமகன் உள்ளிட்டோர் குறித்த பல தகவல்களைவெளியிட்டுள்ளார்.
கோபால் மூலம்தான் வீரப்பனுக்குப் பணம் போனதாக தினகர் எழுதியதை எதிர்த்து கோபால் சார்பில் சென்னைஎழும்பூர் 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக தினகர் இன்று எழும்பூர் நீதிமன்றம் வந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிசாம்பசிவம், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் வெளியே வந்த தினகர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கோபால் இரண்டு முறை ரூ.5 கோடி பணத்தை எடுத்துச் சென்றது 100 சதவீத உண்மை. இதற்கான அனைத்துஆதாரங்களும் என்னிடம் உள்ளது. அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.
என் மீது கோபால் போட்டுள்ளது பொய் வழக்கு. அதனால்தான் அவர் நீதிமன்றத்திற்கே வராமல் இருந்துள்ளார்என்றார் தினகர்.
தினகரின் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோரும் இன்று நீதிமன்றத்திற்குவந்திருந்தனர்.
-->
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications