அமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்த கேரள பாதிரியார்
நியூயார்க்:
அமெரிக்காவில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கேரளாவைச் சேர்ந்த பாதிரியாருக்கு ஓராண்டு சிறைதண்டனை வழங்கப்படும் என்று தெரிகிறது.
கேரள மாநிலம் கட்டாரைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க பாதிரியார் பிரான்சிஸ் நெல்சன் (வயது 38). இந்தியாவில் பாதிரியார்கள்மீது பாலியல் புகார்கள் வந்தால் விசாரிக்கும் பொறுப்பில் இவர் இருந்தார்.
இந் நிலையில் இவரே 1999ம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் புரூக்ளின் நகருக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு சிறுமியைகற்பழித்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் தான் இவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இவரைக் காப்பாற்ற நியூயார்க் டையோசிஸ் மறுத்துவிட்டது. இதையடுத்து இவர் மீதான வழக்கு விசாரணைதீவிரமாக நடந்து வந்தது.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு இப்போது வயது 16. அந்தச் சிறுமி நேற்று முன் தினம் புரூக்ளின் நீதிமன்றத்தில் பாதிரியாருக்குஎதிராக சாட்சியம் அளித்தார். அச் சிறுமி கூறுகையில், 1999ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி நான் எனது பாட்டியின் வீட்டில்இருந்தபோது நெல்சன் அங்கு வந்தார்.
கையில் நிறைய பரிசுப் பொருட்களுடன் வந்த அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறினார்.
இதையடுத்து நெல்சன் குற்றவாளியே என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவருக்கு ஓராண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்படும்என்று தெரிகிறது. இந்த தண்டனை குறித்த உத்தரவு மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்படும்.
ஆனால், நெல்சன் தொடர்ந்து பாதிரியாராகவே இருப்பார் என புரூக்ளின் டயாசிஸ் அறிவித்துள்ளது. அவரை பதவி நீக்கம்செய்வது குறித்து இந்தியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தலைமை பிஷப் முடிவு செய்வார் என்று கூறியுள்ளது.
அமெரிக்காவில் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் நெல்சன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார். தன்னை குற்றவாளியேஎன நீதிமன்றம் அறிவித்த பின் அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது நான் நிரபராதி என நிருபர்களிடம் நெல்சன்கூறினார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications