காங். வேட்பாளர் மகேந்திரன் மனு தாக்கல்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. காங்கிரஸ் கட்சி வேட்பாளரானவழக்கறிஞர் மகேந்திரன் இன்று தன் மனுவைத் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் மற்றும் மூத்த தலைவர்கள்,தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்ற மகேந்திரன், பிற்பகல் 1 மணிக்கு மேல் தேர்தல் அதிகாரியிடம் தன்வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
"கோஷ்டி" கானம்:
முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், வசந்தகுமார், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோரின்ஆதரவாளர்கள் தங்களது தலைவர்களை தனித் தனியாக ஆதரித்து கோஷம் போட்டனர்.
இதனால் வேட்பு மனு தாக்கல் நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் கலாட்டாஎதுவும் நடக்கவில்லை.
வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த இடத்திலும் தங்களது கோஷ்டிப் பூசலை வெளிப்படுத்தி தங்கள் பாரம்பரியத்தைநிரூபித்தனர்.
மத்தியப் படை வேண்டும்:
சாத்தான்குளம் தொகுதியில் அதிமுக தொடர்ந்து விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு வருவதால் அக்கட்சி மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் கமிஷனரான மிருத்யுஞ்சய் சாரங்கியிடம் காங்கிரஸ் கட்சிபுகார் செய்துள்ளது.
இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளரான பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
சாத்தான்குளம் தொகுதியில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வருகின்றனர். அதிமுகவினரின் அராஜகம்புற்றுநோய் போலப் பெருகிக் கொண்டே வருகிறது.
சமீபத்தில் அமைச்சர் அனிதா கிருஷ்ணன் பயன்படுத்திய அரசுக் கார் சாத்தான்குளம் பிரச்சாரத்திற்காகப்பயன்படுத்தப்பட்டபோது வழியிலேயே விபத்துக்குள்ளானது. அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அந்தக் காரைஓட்டிச் சென்றவர் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர்தான் என்றும் தெரிய வந்துள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்குச் சொந்தமான அந்தக் காரை சென்னை நகருக்குள் மட்டுமேஓட்டுவதற்கு உரிமை உள்ளது. ஆனால் அரசுக் காரை சாத்தான்குளம் சென்று வருவதற்கு அதிமுக அமைச்சர்பயன்படுத்தியுள்ளார்.
அரசுக்குச் சொந்தமான அந்தக் கார் சென்னையை விட்டு சாத்தான்குளத்திற்கு சென்றது ஏன்?
மேலும் சாத்தான்குளம் மக்களுக்குக் கொடுப்பதற்காகவே ஈரோட்டில் சுமார் 25,000 சேலைகள், வேஷ்டிகள்,சுடிதார்கள், மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள் ஆகியவற்றை அதிமுகவினர் வாங்கியுள்ளனர். இதற்கானஆதாரம் எங்களிடம் உள்ளது.
மேலும் சாத்தான்குளத்தில் எப்போது பார்த்தாலும் குறைந்தது 10அமைச்சர்களாவது அதிகாரிகளோடு சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
அதிமுகவினரை விட தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று தமிழகப் போலீசாரும் சாத்தான்குளம் தொகுதியில்அடாவடித்தனமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே சாத்தான்குளம் தேர்தல் பாதுகாப்புப் பணியில் மத்தியப் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த வேண்டும்என்றும் தேர்தல் கமிஷனிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் பீட்டர் அல்போன்ஸ்.
மனு தாக்கல் முடிந்தது:
இந்நிலையில் இன்று மாலை 3 மணியுடன் சாத்தான்குளம் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்முடிவடைந்தது.
அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணம், அக்கட்சியின் மாற்று வேட்பாளரும் அவருடைய மகனுமான கதிரவஆதித்தன், மற்றொரு அதிமுக வேட்பாளர் சுதந்திரவல்லி மற்றும் மகேந்திரன் (காங்.) ஆகியோர் மட்டுமே கட்சிசார்பாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து மொத்தம் 39 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் 10ம் தேதி. அதன்பின்னர் சாத்தான்குளம் வேட்பாளர்கள் குறித்த இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 1ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து பிற்பகலில் முடிவுஅறிவிக்கப்படும்.


