உலக கோப்பை கிரிக்கெட்: கோலாகலமாக தொடங்கியது
கேப் டவுன் (தென் ஆப்பிரிக்கா):
8வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழா நேற்று தென் ஆப்பிரிக்க தலைநகரான கேப்டவுன் நகரில் கோலாகலமாக நடைபெற்றன.
உலகில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலகக் கோப்பைகிரிக்கெட் போட்டிகள் நேற்று இரவு வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின.
கேப் டவுன் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சிகளின்போது, 8வதுஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தென் ஆப்பிரிக்க அதிபர் தாபோ எம்பெக்கி முறைப்படி தொடங்கிவைத்தார்.
பின்னர் தென் ஆப்பிரிக்காவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும்வகையிலான கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 14 கிரிக்கெட் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மைதானத்தைவலம் வந்தனர். அப்போது ஒவ்வொரு அணியின் கேப்டனும் தங்கள் நாட்டுக் கொடியை ஏந்திக் கொண்டுவந்தனர்.
இந்நிலையில் முதல் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும்வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதில் மோதுகின்றன.
பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இன்று மாலை (இந்திய நேரப்படி) 6 மணிக்கு தொடங்குகிறது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications