""என் கேள்விக்கு என்ன பதில்?""- ஜெ.விடம் கேட்கிறார் கருணாநிதி
சென்னை:
"தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களாகத்தான் கேள்விகளாகக் கேட்டு வருகிறார். ஆனால் நான்கடந்த 4 ஆண்டுகளாகக் கேட்கும் கேள்விகளுக்கு அவர் முதலில் பதில் கூறட்டும்" என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
ஜெயலலிதா சமீப காலமாக கருணாநிதியையும், திமுகவையும் மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களையும்கடுமையாகச் சாடி வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத்திலும் சரி, அதன் பின்னர் வேலூர், கடலூர் மற்றும் காஞ்சிபுரம்ஆகிய இடங்களில் நடைபெற்ற அரசு விழாக்களின்போதும் சரி. கருணாநிதியைக் கடுமையாகத் தாக்கிப்பேசியுள்ளார்.
நேற்று நடந்த காஞ்சிபுரம் அரசு விழாவில ஜெயலலிதா பேசுகையில்,
கருணாநிதியும், அவருடைய மகன் ஸ்டாலினும், அங்கே இருக்கின்ற சில குட்டிச் சாத்தான்களும் என் மீதுள்ளகோபத்தில் சபாநாயகர் காளிமுத்து மீது குறி வைத்து தாக்குகின்றனர்.
நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தராமல் சம்மந்தமே இல்லாமல் காளிமுத்து பற்றி கேள்வி கேட்கின்றனர்.இப்படி கேள்வி கேட்க திமுகவினருக்கு தகுதி உண்டா? குறிப்பாக, கருணாநிதிக்குத் தகுதி உண்டா?
கடந்த 1998ல் நாங்கள் (அதிமுக) மத்தியில் பா.ஜ.கவினருடன் கூட்டணி வைத்தபோது, அக்கட்சித் தலைவர்களைப்பண்டாரம், பரதேசி என்றெல்லாம் ஏசினார். ஆனால் அடுத்த ஓராண்டிலேயே பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துஅக்கட்சித் தலைவர்களைப் புகழ்ந்து தள்ளியதை கருணாநிதி மறந்து விடுவாரா?
கருணாநிதி ஏன் சட்டசபைக்கு வருவதில்லை? ஸ்டாலின் ஏன் சட்டசபையில் பேசுவதே இல்லை? அவர் ஏன் ஓடிஒளிகிறார் என்றெல்லாம் நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதிலே இல்லை என்று பேசினார் ஜெயலலிதா.
இந்நிலையில் இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சில நாட்களாகத்தான் ஜெயலலிதா கேள்விகளாகக் கேட்டு வருகிறார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாகநான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் எங்கே?
எம்.ஜி.ஆர். தன்னையும், தன் வளர்ச்சியையும் கண்டு பொறாமைப்படுவதாக முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குதன் கைப்படவே ஜெயலலிதா ஆங்கிலத்தில் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதம் "தி ஹிந்து", "இந்தியன் எக்ஸ்பிரஸ்" போன்ற பத்திரிக்கைகளிலும் வெளியிடப்பட்டிருந்தது உண்டா,இல்லையா?
இதைப் பற்றி பலமுறை நான் கேட்டுள்ளேன். அதற்கு இன்னும் ஜெயலலிதா பதிலளிக்கவில்லை.
மேலும், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த பத்மநாபா உள்ளிட்ட 10 பேர் விடுதலைப்புலிகளால்கொல்லப்பட்ட இரண்டாவது மாதத்திலேயே புலிகள் இப்போதெல்லாம் சரியாகி விட்டதாகவும், மத்திய அரசும்தமிழக மக்களும் அவர்களுக்கு அனைத்து வழியிலும் உதவ வேண்டும் என்று ஜெயலலிதா கூறியது உண்டா,இல்லையா?
முதலில் இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஜெயலலிதா பதில் கூறட்டும். அதன் பின்னர் அவருடையகேள்விகளுக்கெல்லாம் நான் விளக்கமாக பதில் சொல்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
"எதிர் கட்சிகள் ஓரணியில் செயல்படுவோம்":
இதற்கிடையே ஜெயலலிதாவின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக எதிர்க் கட்சிகள்அனைத்தும் ஓரணியில் இருந்து கொண்டு செயல்படுவோம் என்ற கருணாநிதி கூறினார்.
திமுக எம்.எல்.ஏவான பரிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நேற்று இரவு சென்னையில் எதிர்க்கட்சிகள் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தினர். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடந்தஇந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில்,
சட்டமன்றத்தின் அதிகாரங்கள் அனைத்தையும் தமிழக அரசு நீதிமன்றத்திடம் ஒப்படைத்து வருவது வேதனைக்குஉரியது.
இந்த சர்வாதிகார அதிமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றவும்எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இருந்து செயல்படுவோம் என்றார் கருணாநிதி.
இந்தக் கண்டனக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாமக, காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், எம்.ஜி.ஆர். கழகம், முஸ்லீம் லீக் உள்ளிட்ட 13கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications