2வது கட்ட போலியோ தடுப்பு மருந்து வழங்கும் பணி துவக்கம்
சென்னை:
தமிழகத்தில் சுமார் 41,000 மையங்கள் மூலம் சுமார் 74 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துஇன்று வழங்கப்பட்டு வருகிறது.
இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் தடுக்கும் முயற்சியாக ஆண்டுதோறும் 5 வயதுக்குக் கீழே உள்ளகுழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு கடந்த ஜனவரி 5ம் தேதி முதற்கட்டமாக தமிழகத்தில் சுமார் 74 லட்சம் குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்து அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இரண்டாவது கட்டமாக குழந்தைகளுக்கு போலியே சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது.முதற்கட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கும், அதன் பின்னர் பிறந்த குழந்தைகளுக்கும் கூட இன்று போலியோசொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் சுமார் 41,000 மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார மையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் இதற்கான சிறப்புமையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சொட்டு மருந்து வழங்கும் பணியில் டாக்டர்கள், நர்ஸ்கள், கம்பவுண்டர்கள், தன்னார்வத் தொண்டர்கள் உள்ளிட்டஇரண்டு லட்சம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்காக நாளையும் நாளை மறுநாளும் கூட போலியோ சொட்டுமருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தனியாகச் செயல்படும் "மொபைல் டீம்" என்றகுழுவினர் நாளையும் நாளை மறுநாளும் வீடு வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்துவழங்குவார்கள்.
-->












Click it and Unblock the Notifications