சென்னை அருகே ரூ.100 கோடியில் அமைகிறது வேத பல்கலைக்கழகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேதங்களைக் கற்பிக்கும் ஒரு பல்கலைக்கழகம் சென்னை அருகே உள்ள சேலையூரில் அடுத்த 2 அல்லது 3ஆண்டுகளில செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ரூ.100 செலவில் ஸ்ரீஅகோபில மடம் இந்தப் பல்கலைக்கழகத்தை அமைக்கவுள்ளது. முதற்கட்டமாகதற்போது வேத பாடசாலையை இந்த மடம் நடத்தி வருகிறது.

இந்த வேதப் பல்கலைக்கழகம் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக விளங்கும். சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில்இந்தப் பல்கலைக்கழகம் அமையவுள்ளது.

சேலையூரில் இதற்கான நிலத்தை வாங்கும் பணியில் ஸ்ரீஅகோபில மடம் ஈடுபட்டுள்ளது. கட்டுமானப்பணிகளுக்குத் தேவையான செலவுத் தொகையை மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காகத் தனிக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த வேதப் பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

வேதங்களையும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் உள்ளிட்ட வேத பாடங்களைப் பயிற்றுவிக்கும் இந்தப்பல்கலைக்கழகத்தில், சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களும் இடம்பெறும்.

முதற்கட்டமாக இந்தப் பல்கலைக்கழகத்தில் 400 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+