கர்நாடகத்துக்கு நியாயம் வேண்டுமாம்: கிருஷ்ணா பிதற்றல்
பெங்களூர்:
ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீர் விட வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்ட காவிரி நடுவர் மன்றம் தனதுஇறுதித் தீர்ப்பிலாவது கர்நாடகத்துக்கு சாதகமான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அம் மாநில முதல்வர் கோரியுள்ளார்.
அதே போல கபினி அணையில் இருந்து கர்நாடகம் திறந்துவிட்டதாகக் கூறப்படும் நீர் இன்னும் மேட்டூருக்கு வரவில்லை.இதனால் கர்நாடகம் புருடா விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் தமிழகத்துக்கு நீர் தருவதில் கர்நாடகம் தகராறு செய்ததால் நடுவர் மன்றத்தை அமைக்கப்பட்டது. இந்த மன்றம்ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரை வாரத்துக்கு இவ்வளவு என தமிழகத்துக்து தர வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், இதை கர்நாடகம் மதித்ததே இல்லை. இந்த உத்தரவை மதித்து நீரைத் தந்ததும் இல்லை. அதே நேரத்தில் இந்தஉத்தரவால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது மாதிரி கர்நாடகம் பேசி வருகிறது.
உச்ச நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் அதை எப்போதாவது மட்டுமே மதித்து தமிழகத்துக்கு நீரை விட்டு வருகிறதுகர்நாடகம். நேற்று பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்திலும் கூட கர்நாடகத்தின் தவறுசுட்டிக் காட்டப்பட்டது.
3 நாட்களுக்கு 4,500 கன அடி நீரும் அதன் பின்னர் நடுவர் மன்றம் சொன்ன அளவு நீரும் தமிழகத்துக்கு விடப்பட வேண்டும்என்று வாஜ்பாய் உத்தரவிட்டார்.
இந் நிலையில் கிருஷ்ணா இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பிலாவது கர்நாடகத்துக்கு நியாயமான தீர்ப்பைத் தரும் என்று நம்புகிறேன்.
மழை பெய்தால் 205 டி.எம்.சி. நீரைத் தந்துவிட முடியும் (மழை பெய்தால் கர்நாடகத்திடம் தமிழகம் நீரைக் கேட்டு தொல்லைதருவதே இல்லை). ஆனால், மழை இல்லாத இந்த ஆண்டில் எப்படித் நீர் தர முடியும்?
தமிழகத்துக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற உத்தரவால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாது. அதைப் பாதுகாப்போம்என்றார் கிருஷ்ணா.
கடந்தமுறை காவிரி தொடர்பாக கர்நாடகத்தில் வன்முறை வெடித்தபோது மாநில அரசு தூங்குகிறதா என்ற கேள்வியைஎழுப்பியது உச்ச நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகம் பொய் சொன்னதா?
இதற்கிடையே கர்நாடக அரசு, கபினி அணையிலிருந்து திறந்து விட்டதாகக் கூறும் காவிரி நீர் இன்னும் மேட்டூர் அணைக்கு வந்துசேரவில்லை.
மேட்டூர் அணைக்கு உடனடியாக வினாடிக்கு 4000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 6ம் தேதி உச்ச நீதிமன்றம்,கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 7ம் தேதிமுதல் கபினி அணையிலிருந்து வினாடிக்கு 4000 கன அடி நீர்திறந்து விடப்பட்டுள்ளதாகக் கர்நாடகம் கூறியுள்ளது.
கபினி அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் வழக்கமாக 72 மணி நேரத்திற்குள் மேட்டூர் அணையை வந்தடையும். ஆனால்,தற்போது 7ம் தேதி திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று காலை வரை அணையை வந்தடையவில்லை.
இதனால் உண்மையிலேயே கர்நாடகம், கபினி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகபொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
காலை 8 மணியளவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 27.39 அடியாகவே இருந்தது. அணைக்கு வினாடிக்கு 556 கன அடிதண்ணீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் இன்னும் 3 நாட்களுக்கு 4.500 கன அடி நீர் தருமாறும் அதன் பின்னர் நடுவர் மன்றம் சொன்ன அளவு நீரைத்தருமாறும் கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதை அம் மாநிலம் மதிக்கும் என்று தோன்றவில்லை.
மாண்டியாவில் போராட்டம்:
இதற்கிடையே தமிழகத்துக்கு நீர் விட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மாண்டியா மாவட்டத்தில் இன்று போராட்டம்வெடித்தது.
இம் மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகளில் மாட்டு வண்டிகளை நிறுத்தி மறியல் போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர்.
கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் மாடே கெளடா, தமிழகத்துக்கு நீர் விடுவதை எதிர்த்து போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.இதற்காக நாளை பல்வேறு விவசாய பிரதிநிதிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications