சாத்தான்குளம் தேர்தலுக்குப் பின் மக்களுக்குக் காத்திருக்கும் ஷாக்
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்குப் பின் மக்களுக்கு பெரும் ஷாக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. தேர்தல்முடிந்தவுடன் மார்ச் 1ம் தேதி முதல் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.
இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டிலோ அல்லது அதற்கு முன்னதாகவே வெளியாகலாம்.
மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் தான் கட்டணத்தை உயர்த்தச் சொன்னது என்று கூறிக் கொண்டு இந்த கட்டண உயர்வுஅமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. மின்துறை ஒழுங்குமுறை வாரியம் பல தரப்பினருடன் பேசித் தான் மின் வாரியத்துக்குகட்டண உயர்வு குறித்து பரிந்துரைக்க வேண்டும்.
இந்த ஆணையம் அரசியல் கட்சிகள், விவசாயிகள் பிரிவினர் மற்றும் பிற அமைப்புகளுடன் மின் கட்டண உயர்வு குறித்துஆலோசனை நடத்திவிட்டது. ஆனால், மின் வாரியத்திடம் மட்டும் முழுமையாக ஆலோசனை நடத்தவில்லை.
சாத்தான்குளம் இடைத் தேர்தல் வருவதால் இப்போதைக்கு மின் வாரியத்தின் கருத்தைக் கேட்க வேண்டாம் என ஆணையத்துக்குஅரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் மின் வாரியத்திடம் ஆணையம் கருத்து கேட்கும். அதுவும் மின் கட்டணத்தைஉயர்த்தலாம் என்று கருத்து சொல்லும். உடனே கட்டண உயர்வும் அமலுக்கு வரும்.
தினமும் மின் வாரியத்துக்கு சுமார் 6 கோடி அளவுக்கு கூடுதல் பணம் வகையில் (ஆண்டுக்கு ரூ. 2,100 கோடி) கட்டண உயர்வுஇருக்கும் என்று தெரிகிறது.
அச்சிறுப்பாக்கம், வாணியம்பாடியில் இடைத் தேர்தல் முடிந்தவுடன் தான் ரேசன் அரிசி விலை உயர்வை தமிழக அரசுஅறிவித்தது. அதுவரை அரிசி விலையை உயர்த்தாமல் இருந்தது. அதே போல சாத்தான்குளம் மக்களுக்கு ஷாக் தரப் போகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications