For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெவுக்கு எதிராக சாட்சி சொன்ன அதிகாரி- அரசு வக்கீல் கடும் வாக்குவாதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விசாரணைகளின் அடிப்படையில் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்குஅதிகமாக ரூ.62.25 கோடி மதிப்புக்கு சொத்துக்களை குவித்தது உண்மை என்று தெரிய வந்துள்ளதாக இதுதொடர்பான வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரியான நல்லம்ம நாயுடு தனி நீதிமன்றத்தில் சாட்சிஅளித்தார்.

கடந்த 1991-96ல் அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிசொத்துக்களைச் சேர்த்ததாகவும் அதற்கு அவருடைய தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன் மற்றும்இளவரசி ஆகியோர் உதவி செய்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சென்னை முதலாவது தனி நீதிமன்றத்தில் நீதிபதி ராஜமாணிக்கம் விசாரித்து வருகிறார்.இவ்வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியான நல்லம்மநாயுடு கடந்த 5ம் தேதியும், 7ம் தேதியும் பின்னர் நேற்றும்சாட்சியம் அளித்தார்.

இந்நிலையில் இன்று 4வது நாளாக நல்லம்ம நாயுடு சாட்சி அளித்தார். காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை தொடர்ந்து அவர் சாட்சி அளித்தார். அப்போது அவரைக் குறுக்கு விசாரணை செய்வதற்காகஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி எழுந்தார்.

உடனே நல்லம்ம நாயுடு, "இந்த வழக்கில் பல ஆவணங்களை நான் பார்க்க வேண்டும். மேலும் என் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு வரும் 17ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்" என்றார்.

இதையடுத்து அவருக்கும், ஜோதிக்கும் பலத்த வாக்குவாதம் எழுந்தது. அதன் விவரம்:

ஜோதி: 17ம் தேதி நான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்திற்குச் செல்ல வேண்டும். அதனால் நான் இன்றேகுறுக்கு விசாரணையை நடத்த விரும்புகிறேன். நாளை விடுமுறை என்பதால் நாளை மறுநாள் மீண்டும்விசாரணையை வைத்துக் கொள்ளலாம்.

நல்லம்ம நாயுடு: என் பிரச்சனையை நீதிபதியிடம் நான் கூறத் தயார். இங்கு பத்திரிக்கை நிருபர்கள் உள்ளனர்.எனவே இங்கேயே சொல்லவும் தயார்.

நீதிபதி: இங்கே ஒளிவு, மறைவே கிடையாது. வெளிப்படையாகத்தான் விசாரணை நடக்கிறது.

அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன்: நல்லம்ம நாயுடு தேவையில்லாமல் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்.

நல்லம்ம நாயுடு(கடும் கோபத்துடன்): யார் குற்றம் சாட்டியது? எனக்குக் கார் அனுப்புவதாகக் கூறிவிட்டுஓடிவிட்டனர். யாரும் எனக்கு ஆவணங்களைக் காட்டவில்லை. எப்போதோ பார்த்ததை வைத்து நான் கஷ்டப்பட்டுசாட்சியம் அளிக்கிறேன். எனக்கு உதவ வேண்டிய அரசு வழக்கறிஞர் என் மீதே பழி போடுகிறார். அபாண்டமாகபொய் குற்றச்சாட்டையும் கூறுகிறார். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

நீதிபதி: விசாரணை அதிகாரிக்கு அரசு வழக்கறிஞர் உதவ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவருக்குஎல்லாம் தெரிய வேண்டும். ஏனென்றால் வழக்கை நடத்தியதே நீங்கள்தான்.

நல்லம்ம நாயுடு: சத்தியமாகச் சொல்கிறேன். என்றைக்கோ நான் தயார் செய்த ஆவணங்களை வைத்து சாட்சிசொல்கிறேன். இப்போது என் மீதே அபாண்டமாகப் பழி போடுகிறார்கள். நான் எப்போதும் என் பணியில்கவனமாக இருப்பேன்.

ஜோதி: பத்திரிக்கையில் வர வேண்டும் என்பதற்காகவும், அதை யாரிடமோ காட்டவுமே இப்படிச் சொல்கிறார்.

நல்லம்ம நாயுடு: அப்படி விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பத்திரிக்கை நிருபர்களைக்கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இதை உங்கள் பத்திரிக்கைகளில் போடாதீர்கள்.

இவ்வாறு இன்று வாக்குவாதம் நடந்தது.

முன்னதாக நேற்று நல்லம்ம நாயுடு சாட்சி அளிக்கும்போது கூறுகையில்,

ஜெ. நடிகையாக இருந்தபோது...

கடந்த 1960களில் நடிகையாக இருந்த ஜெயலலிதா, அவருடைய தாயாருடன் சேர்ந்து "நாட்டிய கலா நிகேதன்"என்ற நிறுவனத்தின் மூலம் சில சொத்துக்களை சம்பாதித்தனர். பின்னர் 1971ல் ஜெயலலிதாவின் தாயார் இறக்கும்முன், தன் சொத்துக்களை உயில் மூலம் எழுதிக் கொடுத்தார்.

கடந்த 1987ல் வருமான வரி கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்தபோது, அவருக்கு இரண்டு கார்களும், ரூ.1லட்சம் வங்கி இருப்பும், நிதி நிறுவன பங்குகளும் இருந்தன என்பது தெரிய வந்தது.

பின்னர் கடந்த 1988ல் ஜெயலலிதா ஒரு காரும், 1989ல் மூன்று கார்களும், 1990ல் மற்றொரு காரும்வாங்கியுள்ளார்.

வந்தார் சசி:

1984 முதல் 1989 வரை ராஜ்யசபா எம்.பியாகவும், பின் 1991 முதல் எம்.எல்.ஏவாகவும் ஜெயலலிதாஇருந்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் சாதாரணமாக அவருடன் பழகிய சசிகலா, பின்னர் போயஸ் கார்டனில் அவருடனேயேசேர்ந்து வசித்தார். அப்போதுதான் இருவரும் சேர்ந்து ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் மற்றும் நமதுஎம்.ஜி.ஆர். ஆகிய நிறுவனங்களைத் தொடங்கினர்.

இந்நிறுவனங்களின் பெயர்களின் கடன் வாங்கியிருந்த இவர்கள், கடந்த 1990 வரை அதைத் திருப்பிச் செலுத்தவேஇல்லை.

சசிகலாவுக்குச் சொல்லிக் கொள்ளும் வகையில் சொத்துக்கள் கிடையாது. அவருடைய கணவர் நடராஜன் அரசுசெய்தித் துறையில் 1998ம் ஆண்டு வரை பணியாற்றினார். அவருக்கும் பூர்வீகச் சொத்துக்கள் எதுவும் கிடையாது.

சுதாகரன், இளவரசி:

இதற்கிடையே சுதாகரனும் கடந்த 1992 முதல் போயஸ் தோட்டத்தில் வசிக்கத் தொடங்கினார். அவருக்கும்வருமானம் கிடையாது. இவர் சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன் ஆவார்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவியான இளவரசிதான் இவ்வழக்கில் நான்காவது எதிரி. ஜெயராமன்சிவில் சப்ளைஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவுக்குச் சொந்தமானதிராட்சைத் தோட்டத்தில் பணியாற்றியபோது மின்சாரம் தாக்கி இறந்தார் ஜெயராமன்.

அதன் பின்னர் இளவரசி தன் மூன்று குழந்தைகளுடன் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில்தான் வசித்துவருகிறார்.

சுதாகரன் திருமணம்:

மேலும் சுதாகரன் திருமண நிகழ்ச்சி தொடர்பாக பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மற்றும்இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரிடம் பிப்ரவரி 4ம் தேதி விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவுசெய்தேன்.

ரஹ்மான் தானாகவே முன் வந்து சுதாகரனின் திருமண அழைப்பிதழுடன் வெகுமதியாக அளிக்கப்பட்டிருந்தவெள்ளித் தட்டு, அங்கவஸ்திரம் மற்றும் குங்குமச் சிமிழ் ஆகியவற்றை சமர்ப்பித்தார்.

சுதாகரன் திருமணம் 1997 பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்றது. அப்போது அவருடைய மனைவியானசத்தியலட்சுமிக்கு (நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தி) கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நகைகள் பின்னர்மதிப்பீடு செய்யப்பட்டு, திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

ஆடம்பர பஸ்:

மேலும் வழக்கில் தொடர்புடைய ஆடம்பர பஸ்சும் கண்டுபிடிக்கப்பட்டு, அரசு என்ஜினியரான வெங்கட்ராமன்உதவியுடன் அது மதிப்பிடப்பட்டது.

ஆடம்பர பஸ் குறித்து டி.எஸ்.பி. கதிரேசன் மும்பைக்குச் சென்று குருதேவ் சிங் என்பவரை விசாரித்து வந்தார்.

மேலும் மார்ச் 11, 14, 17ம் தேதிகளில் கனரா வங்கி மேலாளர் வித்யாசாகரிடமும் விசாரித்து வாக்குமூலம்பெற்றேன்.

அசையா சொத்துக்கள்:

ஜெயலலிதாவும், சசிகலாவும் அவரவர் பெயர்களில் அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர்.அதேபோல் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் பெயர்களிலும் சொத்துக்கள் வாங்கப்பட்டிருந்தன.

இதையடுத்து சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டுமென்று முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தேன்.

மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அசையாச் சொத்துக்களை முடக்கி வைக்கக் கோரி சிறு வழக்குகளைவிசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதியும் பெற்றேன்.

போயஸ் கார்டன் மதிப்பீடு:

1996 டிசம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீட்டை பொதுப்பணித் துறைஎன்ஜினியர்கள் உதவியுடன் மதிப்பீடு செய்தோம். வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் மதிப்பிட்டு,அவற்றை வீடியோ படமும் எடுத்தோம்.

பின்னர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்களை டிசம்பர் 12ம் தேதி நீதிமன்றத்திடம் ஒப்படைத்தோம். மேலும்டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு டி.டி. மூலம் வந்த வெகுமதிகள் குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம்சேகரித்து அனுப்பவும் உத்தரவிட்டேன்.

பின்னர் டிசம்பர் 27, 31 மற்றும் 1997 ஜனவரி 2 ஆகிய மூன்று நாட்களிலும் சென்னை மத்திய சிறைக்குச் சென்றுஜெயலலிதாவைச் சந்தித்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டேன்.

இவை தொடர்பான அறிக்கைகளை கடந்த 1997ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி ஒரு பெண் இன்ஸ்பெக்டருடன்ஜெயலலிதாவின் வீட்டுக்குச் சென்று அவரிடம் நேரில் அளித்தேன்.

அடுத்த 15 நாட்களுக்குள் இதற்கு பதில் அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டேன். அவரும் ஏப்ரல் 24ம் தேதி பதில்அளித்தார்.

அதன் பின்னர் ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டிடம் அனுமதிபெற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சசிகலாவையும் விசாரித்தேன். அவரிடம் ஏற்கனவேபிப்ரவரி 3, 4, 6, 7 மற்றும் 8ம் தேதிகளில் அதே மருத்துவமனையிலேயே விசாரணை நடத்தியிருந்தேன்.

2 கோடி 62 கோடியானது:

1985 முதல் 1991 வரை பல்வேறு வங்கிகளில் ரூ.2,01,83,956 மட்டுமே நிரந்தர வைப்பீடாக வைத்திருந்தார்.

ஆனால் இவ்வழக்கில் தொடர்புடைய சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்ததில் ஜெயலலிதாவருமானத்துக்கு அதிகமாக ரூ.62,25,20,896 வரை சொத்து சேர்த்துள்ளார் என்பது தெரிய வந்தது.

அதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர தமிழக ஆளுநரிடம்அனுமதி கேட்டேன். 1997 ஜூன் 3ம் தேதி அனுமதி கிடைத்தது.

இதைத் தொடர்ந்து இந்தியத் தண்டனைச் சட்டம் 120-பியின் கீழ் வரும் ஊழல் தடுப்புச் சட்டம் 13(2), 13(1)(இ)மற்றும் 109ன் கீழ் வரும் 13(2) மற்ம 13(1)(இ) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜூன் 4ம் தேதி ஜெயலலிதா மீது குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தேன்.

பின்னர் 17ம் தேதி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்துஇறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தேன் என்றார் நல்லம்ம நாயுடு.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X