விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஜெட் ஏர்வேஸ் முன்னாள் பெண் ஊழியர் கைது
கோயம்புத்தூர்:
கோவை- பெங்களூர் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்த ஜெட்ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில்பேசிய பெண், கோவையில் இருந்து பெங்களூர் புறப்பட உள்ள விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகமிரட்டிவிட்டு போனை வைத்துவிட்டார்.
இதையடுத்து கோவை விமான நிலையத்தைத் தொடர்பு கொண்ட பெங்களூர் ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள்குண்டு மிரட்டல் குறித்த தகவலைத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் அந்த விமானத்தில் முழுச் சோதனை நடத்தினர்.ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து இத் தகவலை வெளியிலேயே சொல்லாமல் அப்படியேமறைத்துவிட்ட அதிகாரிகள் விமானத்தை பெங்களூர் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
இது தொடர்பாக கோவை மாநகர போலீசின் சிறப்புப் படை விசாரணை நடத்தியது. அப்போது அந்த மிரட்டல்தொலைபேசி அழைப்பு சிங்காநல்லூரில் உள்ள ஒரு எஸ்.டி.டி. பூத்தில் இருந்து வந்தது தெரியவந்தது.
உடனே அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு மட்டுமே அதன் பெங்களூர்அலுவலக போன் நம்பர் தெரியும் என்பதால் அந்தக் கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.
எஸ்.டி.டி. பூத்தின் உரிமையாளர் தந்த அடையாளத்தை வைத்து விசாரித்தபோது அந்தப் பெண் ஜெட் ஏர்வேசின்முன்னாள் ஊழியராக இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது.
இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் பெண் ஊழியர்களிடம் படங்களை பெங்களூரில் இருந்து பெற்று எஸ்.டி.டி. பூத்உரிமையாளரிடம் காட்டி விசாரித்தபோது ஒரு பெண்ணை அவர அடையாளம் காட்டினார்.
கோவையைச் சேர்ந்த அந்தப் பெண் சமீபத்தில் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம்செய்யப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அப் பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையும் இதே போன்ற மிரட்டல் தொலைபேசி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கோவை அலுவலகத்துக்கு வந்தது.இதனால் கோவை-மும்பை விமானம் வெடிகுண்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications