கோடைநெரிசலைத் தவிர்க்க 600 சிறப்பு ரயில்கள் தயார்!
சென்னை:
கோடைகாலப் பயணிகள் நெரிசலைத் தவிர்ப்பதற்காக 600 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேதிட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நாகர்கோவில், திருவனந்தபுரம்,பாலக்காடு, கொல்லம் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்படும்.
அதே போல மதுரையிலிருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள சாய்பாபாவின் அலுவலகம் அமைந்துள்ளபிரசாந்திநிலையத்திற்கு வாராந்தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
கடந்த ஆண்டு விடப்பட்ட சிறப்பு ரயில்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இதையடுத்து இந்தஆண்டும் சிறப்பு ரயில்களை விட தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இருப்பினும் கடந்த ஆண்டு விடப்பட்ட சிறப்பு ரயில்களை (978) விட இந்த ஆண்டு குறைவான ரயில்களேவிடப்படுகின்றன. காரணம், வழக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயில்களின் எண்ணிக்கை அதிகமாகஇருப்பதால்தான் என்கிறது தெற்கு ரயில்வே.
-ஏப்ரல் முதல் "திருக்குறள்" எக்ஸ்பிரசில் மினி தியேட்டர்:
இதற்கிடையே கன்னியாகுமரிக்கும் டெல்லிக்கும் இடையே இயக்கப்படும் "திருக்குறள் எக்ஸ்பிரஸ்" ரயிலில் வரும்ஏப்ரல் மாதம் முதல் மினி தியேட்டர் இயங்கும் என்று ரயில்வே இணை அமைச்சரான ஏ.கே. மூர்த்தி தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, டிக்கெட் முன் பதிவு வசதியைத்துவக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
நீண்ட தூர ரயில்களில் மினி தியேட்டரை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக"திருக்குறள் எக்ஸ்பிரஸ்" ரயிலில் விரைவில் மினி தியேட்டர் அமைக்கப்படவுள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தத் தியேட்டரில் படங்கள் ஒளிபரப்பப்படும். சுமார் 100 பேர் அமர்ந்து படம் பார்க்கவசதி கொண்ட இந்தத் தியேட்டரில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடப்படும்.
தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்கள் இதில் திரையிடப்படும் என்றார் மூர்த்தி.
-->
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications