"வீரப்பன் விரைவில் பிடிபடுவான்": கிருஷ்ணா நம்பிக்கை
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதில் தமிழக, கர்நாடக அதிரடிப்படைகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாககர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மர்மமானமுறையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு மாநில அதிரடிப்படையினரும் அவனைப் பிடிப்பதற்காககாட்டுக்குள் தீவிர வேட்டையாடி வருகின்றனர்.
மேலும் நாகப்பா சாவு தொடர்பாக இரு மாநிலங்களிலும் சேர்ந்து 20க்கும் மேற்பட்ட வீரப்பனின் கூட்டாளிகள்கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணா இன்று பெங்களூரில் நிருபர்களிடம் கூறுகையில்,
அதிரடிப்படையினர் வீரப்பனை விரட்டிக் கொண்டுதான் உள்ளனர். அவனும் காட்டுக்குள்ளேயே தப்பித்து ஓடிஒளிந்து கொண்டே இருக்கிறான்.
இரு மாநில அதிரடிப்படையினரும் சேர்ந்து தற்போது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால் அவன் விரைவில்நிச்சயம் பிடிபடுவான்.
வீரப்பன் பிரச்சனையாலும், காவிரிப் பிரச்சனையாலும் கர்நாடக அரசுக்கு நிறைய இழப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பை அளிக்கும்போது, காவிரிப் பிரச்சனை முழுவதுமாகத் தீர்ந்துவிடும் என்றார் கிருஷ்ணா.
"வீரப்பன் பிடிபட்டு விட்டான் என்ற நல்ல செய்தியை எப்போது அறிவிப்பீர்கள்?" என்று ஒரு நிருபர் கேட்டதற்கு,"கவலைப்படாதீர்கள். அவன் பிடிபட்டால் எங்களை விட உங்களுக்குத்தான் அது முதலில் தெரியும்" என்றுபதிலளித்தார் கிருஷ்ணா.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications