ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களை இரவில் வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல்
சென்னை:
சென்னையில் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களைக் குறிவைத்துத் தாக்கி, அவர்களை மிரட்டிபணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
தங்கள் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பணம் எடுத்துக் கொள்வதற்கு வசதியாக ஏ.டி.எம். மையங்களைவங்கிகள் அமைத்துள்ளன.
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெருநகரங்களில் ஏ.டி.எம். மையங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் ஏ.டி.எம். கார்டுகள், கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்களை இரவு நேரங்களில்வழிமறித்துத் தாக்கி, மிரட்டி, அவர்களை அந்த மையங்களுக்கு அழைத்துச் சென்று பணத்தை எடுக்கச் செய்துஅதைப் பறித்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஏ.டி.எம். கார்டுதாரர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
வடபழனியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தனியார் ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்றுஇரவு அவர் தன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரைச் சிலர் வழிமறித்தனர்.
வெங்கடாசலத்தைக் காரை விட்டு இறங்குமாறு கூறிய அந்த மர்ம நபர்கள், அவரைத் திடீரென்று சராமாரியாகத்தாக்கினர். பின்னர் அவரிடமிருந்த தங்கச் செயின், பணம் ஆகியவற்றை அவர்கள் பறித்துக் கொண்டனர்.
இதையடுத்து அவருடைய பர்சையும் சோதனை போட்ட அவர்கள், அதில் ஏ.டி.எம். கார்டு இருப்பதைக்கண்டுபிடித்தனர். உடனே அவருடைய காரிலேயே ஏறிக் கொண்ட அந்த நபர்கள், குறிப்பிட்ட ஏ.டி.எம்.மையத்தை நோக்கிக் காரைச் செலுத்துமாறு வெங்கடாசலத்தை மிரட்டினர்.
ஏ.டி.எம். மையத்துக்குச் சென்ற பின்னர் அவரை மேலும் மிரட்டிய அந்த நபர்கள், அங்கிருந்து பணம் எடுத்துக்கொண்டு வருமாறு கூறினர். பின்னர் அவர் கொண்டு வந்த ரூ.11,000 பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து வெங்கடாசலம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் பணிபுரியும் ரவிச்சந்திரன் என்பவரும் இதே போலவே சிலவழிப்பறிக் கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டார்.
அவரைக் கிரிக்கெட் மட்டையால் அவர்கள் சராமாரியாகத் தாக்கினர். இதனால் அவர் மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
பின்னர் ரவிச்சந்திரனிடம் ஏ.டி.எம். கார்டு இல்லை என்று தெரிந்தவுடன் கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.இதன் பிறகு ரவிச்சந்திரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சென்னையில் கடந்த வாரம் மட்டும் இதுபோன்ற ஏ.டி.எம். கார்டுதாரர்கள் மீதான 10 தாக்குதல் புகார்கள்வந்துள்ளதாகத் தெரிவித்த போலீசார், இந்த "ஏ.டி.எம்." வழிப்பறிக் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
பெரும்பாலும் இரவு நேரங்களில் தனியே வருபவர்களைத் தான் இந்தக் கும்பல்கள் தாக்கி வருகின்றன. ஏ.டி.எம்.மையங்களுக்கு வெளியே கையில் அரிவாள், பட்டாக் கத்திகளுடன் கும்பல் நின்று கொள்ள ஒருவன் மட்டும் கார்டுவைத்திருப்பவருடன் ஏ.டி.எம். மெசின் வரை வந்து பணத்தைப் எடுக்கச் செய்து பறிக்கின்றனர்.
இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில், உயிர் பயத்தால் யாரும் இக் கும்பல்களுடன் மோதவோ,உதவி கேட்டு குரல் எழுப்பவோ முடியாமல் போய்விடுவதாக போலீசார் கூறுகின்றனர்.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications