இன்று பக்ரீத் பண்டிகை: தமிழகத்தில் உற்சாகக் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் மசூதிகளில் இன்று காலை சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்தன. சென்னை மெரீனா கடற்கரையில்ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனர். கடற்கரையில் இமாம் முக்திமுகம்மது இந்ததொழுகையை தலைமை ஏற்று நடத்தினார்.

அதே போல தமிழகத்தின் பல நகரங்களிலும் ஈத்கா மைதானங்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் முஸ்லீம்கள் பெரும் எண்ணிக்கையில்பங்கேற்றனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டனர்.

முஸ்லீம்களுக்கு பிற மதங்களைச் சேர்ந்த மக்களும் தங்களது பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள மசூதியில் நடந்த பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பங்கேற்றார். ஜனாதிபதிமாளிகையின் ஊழியர்கள் தங்களது குடும்ங்களுடன் சென்று கலாமை வாழ்த்தினர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் வாஜ்பாய், தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி,காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன், பா.ம.க. தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்குவாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

பக்ரீதையொட்டி நாடு முழுவதும் மசூதிகளுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. டெல்லி, மும்பையில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

பக்ரீத்தையொட்டி மதுரையில் ஆட்டுக் கிடாய் சண்டை நிகழ்ச்சியும் நடந்தது.

கோவையின் சில பகுதிகளில் மட்டும் நேற்றே பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டுவிட்டது.

இறைவனின் ஆணையை கட்டாயம் மதித்து நடக்க வேண்டும் என்பதையும், தங்களிடம் இருப்பதை உறவினர்கள், அண்டை வீட்டினர்,ஏழைகளுடன் பகிர்ந்து கொடுத்து வாழ்வதையும் வலியுறுத்தும் பண்டிகை தான் பக்ரீத் ஆகும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+