பவானி அணை பிரச்சனை: தமிழக- கேரள அமைச்சர்கள் நாளை முக்கிய ஆலோசனை
திருவனந்தபுரம்:
பவானி அணை பிரச்சனை தொடர்பாக நாளை தமிழக, கேரள அமைச்சர்கள் பேச்சு நடத்த உள்ளனர்.
பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் தடுப்பு அணைக் கட்ட கேரளம் திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளது.
அணை கட்டினால் கோவை, ஈரோடு மாவட்டங்களில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும் என்பதாலும், மேலும்பல லட்சம் ஏக்கர் விவசாய நிலமும் பாழ்பட்டுப் போகும் என்பதால் இத் திட்டத்தை தமிழகம் எதிர்த்தது.
அணை கட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்திலும் தமிழகம் வழக்குத் தொடர்ந்தோடு கேரள முதல்வர்ஆண்டனிக்கும் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
அதில், இந்தப் பிரச்சனையை காவிரி நடுவர் மன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என்று ஜெயலலிதா கோரியிருந்தார்.
இதற்கு பதில் கடிதம் எழுதிய கேரள முதல்வர் இப் பிரச்சனை குறித்து அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தலாம் என்று யோசனைதெரிவித்திருந்தார்.
இதை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து நாளை திருவனந்தபுரத்தில் நடக்கும் கூட்டத்தில் இரு மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டு பவானி அணை விவகாரம்குறித்து விவாதிப்பர்.
இதற்காக தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு நாளை திருவனந்தபுரம் செல்கிறது. இதில்நிதியமைச்சர் பொன்னையன், சட்ட அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுநாளை திருவனந்தபுரம் செல்லும்.
கேரள பாசனத்துறை அமைச்சர் ஜேக்கப் தலைமையிலான உயர் மட்டக் குழு அம் மாநிலத்தின் சார்பில் பேச்சுவார்த்கைளில் பங்கேற்கிறது.
பிரதமர் தலையிட வைகோ கோரிக்கை:
இந் நிலையில் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவைதத் தடுக்குமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
வேலூர் சிறையிலிருந்து வாஜ்பாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில்,
கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 40 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவை, 3 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு ஆகியவற்றிற்கு பவானிஆறு மட்டுமே நீர் ஆதாராமாக உள்ளது.
இதுமட்டுமல்லாது, இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்த ஏராளமான தொழிற்சாலைகளும் பவானி ஆற்றை நம்பியே உள்ளன.
இந் நிலையில் பவானி ஆற்றின் போக்கை மாற்றியமைக்கும் வகையில் தடுப்பு அணைகட்டுவது இரு மாவட்டங்களையும்வற்றவைத்துவிடும். எனவே, தாங்கள் தலையிட்டு கேரள அரசின் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications