திமுக ஆட்சியில் நடந்த தேங்காய் ஊழல்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை
திருச்சி:
திமுக ஆட்சி காலத்தில் நடந்த கொப்பரைத் தேங்காய் கொள்முதல் ஊழல் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகபுதுக்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
விவசாயிகளிடம் இருந்து கொப்பரைத் தேங்காயை அரசு கொள்முதல் செய்ததில் இந்த ஊழல் நடந்தது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டவேளாண்மை கூட்டுறவு வங்கியில் தான் பெரும் ஊழல் நடந்தது.
திமுக ஆட்சியில் இந்த வங்கி மூலம் ஒரே ஆண்டில் ரூ. 2.8 கோடிக்கு தேங்காய்களை விவசாயிகளிடம் இருந்து அரசு வாங்கியது. 189விவசாயிகளிடம் தேங்காய் வாங்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், இதில் 174 பேருக்கும் விவசாயத்துக்கும் எந்தசம்பந்தமும் இல்லை. இவர்கள் அனைவருமே திமுக கரை வேட்டிகள்.
ஆனால், இக் கும்பலை விவசாயிகளாகக் கூட்டுவதற்காக வி.ஏ.ஓவின் போலிச் சான்றுகளும் தயாரிக்கப்பட்டன. இந்த ஊழல் தொடர்பாககீரனூர் திமுக ஒன்றியத் செயலாளர் மற்றும் சில திமுக முக்கியப் புள்ளிகளின் வீடுகள், கடைகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் திடீர் சோதனைநடத்தினர்.
இந்த கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்து திமுகவைச் சேர்ந்த அன்புச் செல்வம், திமுகவைச் சேர்ந்த கண்ணைய்யா, சட்டவிரோதமாகஆற்றில் மணல் அள்ளும் கும்பலைச் சேர்ந்த அண்ணாதுரை உள்ளிட்டவர்களின் வீடுகளில் இச் சோதனைகள் நடந்தன.
திமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த கே.என். நேருவின் பினாமியான அருண என்பவரின் திருச்சி வீட்டிலும் சோதனைநடந்தது. இந்த வீட்டில் மட்டும் ரூ. 1.5 லட்சம் சொத்துப் பத்திரங்கள், கணக்கில் இல்லாத பணம் ரூ. 61,000 ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த ரெய்டில் சிக்கிய அனைத்து ஆவனங்கள், சொத்துக்களும் புதுக்கோட்டை தலைமை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த ரெய்டுகள் மேலும் தொடரும் என்று தெரிகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications