ஜெ. ஈரோடு வருகை: கருப்புக் கொடி காட்ட முயன்ற நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது
ஈரோடு:
ஈரோட்டில் அரசு நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்க முதல்வர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலம் அங்கு செல்கிறார்.
பவானி ஆற்றுப் பிரச்சனையிலும், வறட்சி நிவாரணத்திலும் தமிழக அரசு உரிய அக்கறை காட்டவில்லை என்று கூறி ஜெயலலிதாவுக்குக்கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளன. மேலும் பலர் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.
கீழ்பவானி விவசாயிகள் சங்கமும், தமிழக விவசாயிகள் சங்கத்தினரும் ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி காட்டுவது என்று முடிவுசெய்துள்ளனர்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி ஈரோட்டில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 2,000போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு- சத்தி ரோட்டில் உள்ள சிக்கையா நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடக்கும் இந்த விழாவில் சுமார் ரூ. 400 கோடி மதிப்புள்ளதிட்டங்களை ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். ஜெயலலிதா வந்திறங்க வசதியாக இக் கல்லூரி வளாகத்திலேயே ஹெலிபேடும்அமைக்கப்பட்டுள்ளது.
அவருக்காக பெருந்துரை ரோட்டில் உள்ள விருந்தினர் இல்லமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஜெயலலிதா அங்கு செல்வார்.இதனால் பெருந்துரை ரோட்டுக்குச் செல்லும் முக்கிய சாலைகளுக்கு எல்லாம் தார் பூசி மினுக்கி விட்டுள்ளது பொதுப் பணித்துறை.
விருந்தினர் இல்லத்தையும் பல லட்சம் செலவில் புதுப்பித்துள்ளனர். மேலும் ஜெயலலிதாவின் வருகையை ஒட்டி இந்த இல்லம்அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள மேட்டூர் மெயின்ரோடு, சத்தியமங்கலம் ரோடு, பெருந்துரை மெயின்ரோட்டில் இன்று காலைமுதலே போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது.
ஜெயலலிதாவை வரவேற்று தோரணங்களும், வரவேற்பு வளைவுகளும், ஆளுயர போஸ்டர்களும் ஒட்டி ஈரோடு நகரையே விழாக்கோலமாக்கியுள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள். விவசாயிகள் யாரும் கருப்புக் கொடியுடன் வந்துவிடாமல் தடுக்கும் கண்காணிப்புப் பணியிலும்அதிமுக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications