அரசு ஊழியர் ஓய்வூதியத்தில் கை வைக்கும் அரசு
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்குப் பின் மின் கட்டண உயர்வு நிச்சயம் என்றாகிவிட்ட நிலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின்பென்சனையும் குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி இந்த அதிரடி நடவடிக்கை அமலுக்கு வரஉள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் பல சலுகைகள் பறிக்கப்பட்டுவிட்டன. விருப்ப ஓய்வுத் திட்டம் என்றபெயரில் கட்டாய ஓய்வில் செல்ல வேண்டிய நிலைக்கு பல ஊழியர்களும் தள்ளப்பட்டு வருகின்றனர்.
மேலும் பஸ்கள் தனியார்மயமாக்கல், துறைகளைக் குறைத்தல், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் என நிதி நெருக்கடியால்பலவிதமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
சமீபத்தில் குறைக்கப்பட்ட கேளிக்கை வரியை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மிக விரைவில் சினிமா கட்டணங்கள் பல மடங்குஉயரும். நிதி ஆதாரத்தை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
இந் நிலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் பென்சனிலும் கை வைக்கப் போகிறது தமிழக அரசு. பணியில் இருந்தபோது கடைசியாகவாங்கிய ஊதியத்தில் பாதியைத் தான் இப்போது பென்சனாக அரசு ஊழியர்கள் வாங்கி வருகின்றனர். கடைசி நேரத்தில் பதவி உயர்வுபெற்றால் அதனால் ஓய்வூதியமும் உயரும். இனி இந்த கடைசி நேர பதவி உயர்வுக்கு ஏற்ப கூடுதலாக ஓய்வூதியம் தருவதை நிறுத்த அரசுமுடிவு செய்துள்ளது.
ஓய்வு பெறும் முன் கடைசி 12 மாதங்கள் வாங்கிய சம்பளத்தைக் கூட்டி அதில் சராசரியாகப் பாதியை மட்டுமே ஓய்வூதியமாக வழங்குவதுஎன அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும் முழுப் பென்சன் வாங்க வேண்டுமானால் 30 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும் என்ற விதியும் மாற்றப்படுகிறது. இந்தவரம்பை 33 ஆண்டுகளாக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் முழுப் பென்சன் பெறுவோரின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
மேலும் வரும் மார்ச் 31ம் தேதிக்குப் பின் ஓய்வு பெறுபவர்கள், விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு பல சலுகைகள் பறிக்கப்படும் என்றும்எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் விருப்ப ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையை மார்ச்சுக்குள் பல மடங்கு அதிகரிக்க அரசுதிட்டமிட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சாத்தான்குளம் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பின்னர் தான் அறிவிக்கப்படும் எனகோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications