கர்நாடகத்தின் துரோகமும், ஜெயலலிதாவின் மெத்தனமும்: ராமதாஸ் கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

ஜெயலலிதாவின் மெத்தனமும், கர்நாடகத்தின் துரோகமும் சேர்ந்து தமிழ்நாட்டையே பாலைவனமாக்கிவிட்டதாக பா.ம.க. நிறுவனர்ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

சேலத்தில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

குறுவை, சம்பா, தாளடி என்ற முப்போகமும் பொய்த்துப் போனது தமிழகத்தில் இது தான் முதல் முறையாகும். ஆனால், கர்நாடகம் மழைஇல்லை, நீர் இல்லை என்று பொய் சொல்லிக் கொண்டே இரு போகம் நெல் அறுவடை செய்துள்ளது. 3வது போகமாக கரும்புபயிரிட்டுள்ளது கர்நாடகம்.

வரும் ஜூன் மாதத்திலாவது இந்த நிலையை மாற்ற இப்போதே முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும், டெல்லி சென்று ஒருவாரமோ தேவைப்பட்டால் ஒரு மாதமோ தங்கியிருந்தாவது தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெறும் முயற்சிகளில் அவர் ஈடுபடவேண்டும்.

கெளரவம் பார்க்காமல் பிரதமரை அடிக்கடி சந்தித்து ஜெயலலிதா பேச வேண்டும். டெல்லியி உட்கார்ந்தே பைல்களைப் பார்க்கலாம்.

சாத்தான்குளத்தில் ஓட்டு கேட்க அங்கு போய் 5 நாட்கள் தங்கப் போகும் ஜெயலலிதா, தமிழக விவசாயிகளின் நலனுக்காக டெல்லியில்போய் 15 நாட்கள் தங்கினால் குறைந்து போய்விட மாட்டார்.

வரும் 16ம் தேதி டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடக்கிறது. அப்போது பிரதமர் வாஜ்பாயிடம்தமிழகத்துக்கு கூடுதல் நீர் விட உத்தரவிடுமாறு வலியுறுத்துவேன்.

நதிகள் இணைப்பு நடக்க பல காலமாகும். அதற்குள் தமிழகம் பாலைவனமாகிவிடும். எனவே, வறட்சிக் காலத்திலும் தமிழகத்துக்குஇவ்வளவு நீரை கர்நாடகம் விட்டுத் தான் ஆக வேண்டும் என்ற புதிய விதிமுறையை காவிரி நதி நீர் ஆணையம் உருவாக்க வேண்டும.

இதற்காக டெல்லியிலேயே போய் டேரா போட்டாவது ஜெயலலிதா காரியத்தை சாதிக்க வேண்டும்.

மாவட்டந்தோறும் ஹெலிகாப்டரில் பறந்து போய் ஆடம்பரமாய் விழா நடத்துவதை ஜெயலலிதா முதலில் நிறுத்தலாம். விவசாயிக்கேசோறு இல்லாத இந்த நேரத்தில் ஆடம்பரம் எதற்கு? என்றார் ராமதாஸ்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+