ராபின் மெயின் மீண்டும் கைவரிசை!
சென்னை:
பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய ராபின் மெயின் மீண்டும் ஒரு மோசடியில் ஈடுபட்டுகைதாகியுள்ளார்.
விதவிதமான மோசடிகளை நடத்தி பலமுறை கைதாகியவர் ராபின்மெயின். தற்போதைய சபாநாயகர்காளிமுத்துவும் ராபின்மெயினுக்காக ஜாமீன் கையெழுத்துப் போட்டுவிட்டு படாதபாடு பட்டுள்ளார்.
இந் நிலையில் ராபின்மெயின் மீண்டும் ஒரு மோசடியில் ஈடுபட்டுக் கைதாகியுள்ளார்.
கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை சமீபத்தில்அணுகினார் ராபின்மெயின். அவரிடம் தன்னை தாமஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
ஒரு மாருதி காரைக் காட்டிய ராபின்மெயின் அதன் ஆர்.சி. புத்தக்தை பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்து அதைவைத்துக் கொண்டு கடன் தருமாறு கேட்டார்.
இதை நம்பி அந்த ஆர்.சி. புத்தகத்தின் அடிப்படையில் ராபின்மெயினுக்கு பாலசுப்ரமணியம் ரூ.2.75 லட்சம் கடன்கொடுத்துள்ளார்.
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் வாங்கிய பணத்தை ராபின்மெயின் திருப்பித் தரவில்லை. இதையடுத்துபாலசுப்பிரமணியம் போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் விசாரணை நடத்தியபோது தாமஸ் என்ற பெயரில் ராபின்மெயின் கொடுத்த விலாசம் போலியானதுஎன்றும், அந்த ஆர்.சி. புத்தகமும் போலியானது என்றும் தெரிய வந்தது.
மேலும், அவர் காட்டிய காரும், திருட்டுக் கார் என்று தெரிந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணைநடத்திபோது இது ராபின் மெயினின் இன்னொரு கைவரிசை என்று தெரிந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தி.நகரில் உள்ள ஒரு நிதிநிறுவனத்திலும் இதே போல போலி ஆர்.சி. புத்தகத்தைக் காட்டி ஏமாற்றியதும் தெரிய வந்தது.
ராபின் மெயினிடம் இருந்த அந்த திருட்டு மாருதி காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ராபின்மெயினுக்கு இதுபோல மோசடிகள் கைவந்த கலையாகும்.
அவர் மீது இதுவரை தமிழகத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாக விசாரணையில் உள்ளன. போலிஆர்.சி. புத்தகங்கள் தயாரிப்பது, இலங்கை செல்ல போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்துக் கொடுப்பது ஆகியவற்றைசமீப காலமாக அவர் செய்து வந்துள்ளார்.
அவரது கூட்டாளிகளையும் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications