மைசூர் தமிழ்க் குடும்பங்களை ஒன்றிணைக்க நட்புத் திருவிழா: தமிழ்ச் சங்கம் முயற்சி
மைசூர்:
மைசூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நட்புத் திருவிழா நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தைவிட்டு வந்து மைசூரில் குடியேறி வாழும் தமிழர் குடும்பங்களுக்கு இடையே நட்பை உருவாக்கும் முயற்சியாக இந்த விழாநடத்தப்படுகிறது.
இது குறித்து மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜகோபால் கூறியதாவது:
மைசூரில் வாழும் அனைத்துத் தமிழர் குடும்பங்களையும் ஒருவரோடு ஒருவர் அறிமுகப்படுத்திவிடும் முயற்சி தான் இது.தமிழகத்தைவிட்டு இங்கு வாழ்ந்துவரும் பெரும்பான்மையான தமிழர்கள் தனிமையில் உள்ளனர்.
இவர்களுக்கு மைசூரில் சொந்த பந்தங்கள் இல்லை. மகனுக்கோ, மகளுக்கோ திருமண வயது வந்தால் வரன் தேடி தமிழகத்துக்குத் தான் ஓடவேண்டிய நிலை உள்ளது. ஆனால், மைசூரிலேயே பெரும் எண்ணிக்கையில் மாப்பிள்ளைகளும் மணப் பெண்களும் உள்ளனர்.
உரிய அறிமுகமும் நட்பும் இல்லாததால் தான் இங்குள்ள தமிழர்கள் தனித்தனியே தீவுகள் மாதிரி வாழ்கிறார்கள். இந்தத் தனிமையைப்போக்கவும், இங்கேயே அவர்களுக்கு புதிய உறவுகளை ஏற்படுத்தித் தரவும் தான் நட்புத் திருவிழாவை தமிழ்ச் சங்கம் நடத்த உள்ளது.
ஒரு நாள் முழுவதும் தமிழச் சங்கத்திலேயே கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், கருத்துரைகளுடன் இந்த விழா நடக்கும்.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் சங்கத்தின் வளர்ச்சி நிதிக்கு உதவும் வகையில் டிக்கெட் பெற்றுக் கொள்ள வேண்டும். 12ம் தேதி வரைஇந்த டிக்கெட்டுகள் விற்கப்படும் என்றார்.
சங்கத்தின் செயலாளர் புகழேந்தியும் உடன் இருந்தார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications