எதிர்க் கட்சிகளை எதிரிகளாக நினைக்காதீர்கள்: வாசன் வேண்டுகோள்
புதுக்கோட்டை:
எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சிகளாக நினைக்கும் போக்கை முதல்வர் ஜெயலலிதா கைவிட வேண்டும் என்று அகிலஇந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
முதல்வராகப் பதவியேற்றபோது தமிழகத்தை நாட்டிலேயேமுதல் மாநிலமாக மாற்றப் போவதாக ஜெயலலிதாகூறினார். ஆனால், மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தி வருவதன் மூலம் நாட்டிலேயே கடைசிமாநிலமாக தற்போது தமிழகம் மாறிக் கொண்டுள்ளது.
அரசின் போக்கைக் கண்டித்து எதிர்க் கட்சிகளால் போராட மட்டுமேமுடியும். எனவே, மக்களின் தேவைகளைஉணர்ந்து அரசே உரிய நடவடிக்கைகள், கொள்கைகளை வகுத்து செயல்பட வேண்டும்.
எதிர்க்கட்சிகளை எதிரிகளாக நினைத்து, பழிவாங்கும் போக்கைக் கடைப்பிடிப்பதை முதல்வர் ஜெயலலிதாகைவிட வேண்டும். எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மதிக்கவேண்டும்.
தமிழக மக்கள் இப்போதுள்ள நிலையில் மின் கட்டணத்தை உயர்த்துவது, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும்இலவச மின்சாரத்தை ரத்து செய்வது போன்றவற்றை தமிழக அரசு கைவிட வேண்டும்.
சாத்தான்குளத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அந்தத் தொகுதியில் அதிமுகவினர்செய்து வரும் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம்முறையிட்டுள்ளோம்.
நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்என்றார் வாசன்.
-->












Click it and Unblock the Notifications