ஈரானில் பின் லேடனின் மகன்?
ரியாத்:
சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடனின் மூத்த மகன் சாத் தற்போது ஈரானில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் பின் லேடனின் அல்-காய்தா தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியிருந்த அந்தத் தீவிரவாதிகள் மீது அமெரிக்கபடை கடும் தாக்குதல் நடத்தியது.
அந்தச் சமயத்தில் பின் லேடனுடன் ஆப்கானிஸ்தானில்தான் சாத்தும் இருந்தான். அமெரிக்காவுக்கு எதிரானதாக்குதல் நடத்தும் அல்-காய்தா படையினரை அவன்தான் வழிநடத்திச் சென்று கொண்டிருந்தான்.
இந்நிலையில் தற்போது சாத் ஈரானில் இருப்பதாக சவூதி அரேபியாவில் வெளியாகும் அல்-ஷார்க் அல்-அவ்சாத்என்ற பத்திரிக்கை கூறியுள்ளது.
ஆனால் பின் லேடன் ஈரானில் இல்லை என்றும் கூறும் அப்பத்திரிக்கை, எனவே அமெரிக்கத் தாக்குதலில் பின்லேடன் இறந்து போயிருக்கலாம் அல்லது படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் கூறுகிறது.
அமெரிக்கா மீது கடுமையான தாக்குதல் நடத்த ஈராக் மக்களுக்கு பின் லேடன் அழைப்பு விடுக்கும் செய்தியைஓரிரு நாட்களுக்கு முன்புதான் அல்-ஜசீரா டி.வி. ஒளிபரப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பின் லேடனின் புதிய ஆடியோ கேசட் ஒன்று தங்களிடம் இருப்பதாக பிரிட்டிஷில் வெளியாகும்அல்-அன்சார் என்ற இஸ்லாமியப் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
அந்தக் கேசட்டில் பேசியுள்ள பின் லேடன், திருக்குரானிலிருந்து சில வாசகங்களை மேற்கோள் காட்டியுள்ளதாகஅப்பத்திரிக்கையைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவர் தெரிவித்துள்ளார்.
-->
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications