ஒருவழியாய் வந்தது காவிரி நீர்
சென்னை:
காவிரியில் தினசரி வினாடிக்கு 4,500 கன அடி நீர் விடுவிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படிகாவிரியில் கடந்த 7ம் தேதி தண்ணீர் திறந்து விட்டதாக கர்நாடக அரசு கூறியது பொய் என்பதுநிரூபணமாகியுள்ளது.
பிரதமர் உத்தரவுப்படி கடந்த 11ம் தேதி தான் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. அந்த நீர் தான் இன்று மேட்டூர்அணைக்கு வரத் தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணைக்கு 10ம் தேதி வரை தினசரி வினாடிக்கு 4,500 கன அடி நீர் திறந்து விடப்பட வேண்டும் என்றுகடந்த 6ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்படுவதாகத் தெரிவித்த கர்நாடக அரசு, கடந்த 7ம் தேதி முதல் கபினிஅணையிலிருந்து நீர் திறந்து விட்டதாகவும் தெரிவித்தது.
கபினி அணையில் நீர் திறந்துவிடப்பட்டிருந்தால் மூன்று நாட்களுக்குள் அது எப்படியும் மேட்டூர் அணைக்கு வந்துவிடும். ஆனால் நேற்றுடன் ஒரு வாரமாகி விட்ட நிலையிலும் மேட்டூர் அணைக்கு நீர் வரவில்லை.
இதற்கிடையே கடந்த 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடிய காவிரி நதி நீர் ஆணையம்,தமிழகத்திற்குத் மேலும் மூன்று நாட்களுக்கு (இன்று வரை) வினாடிக்கு 4,500 கன அடி வீதம் நீர் திறந்து விடும்படிஉத்தரவிட்டது.
அதன் பிறகு தான் கபினி அணையிலிருந்து கர்நாடகம் நீரையே திறந்துவிட்டது. இந்த நீர் இன்று அதிகாலை 3மணிக்கு மேட்டூர் வர ஆரம்பித்தது.
எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை கபினி அணையிலிருந்து நீர் திறந்துவிட்டதாகக் கர்நாடக அரசு கூறியது பொய் என்பது உறுதியாகிவிட்டதாக தமிழக பொதுப்பணித் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் மறுபடியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காற்றில் பறக்க விட்டுள்ளது கர்நாடக அரசு.
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய நீர் வந்ததால் மேட்டூர் அணையில் நீர்வரத்துஅதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 28.27 அடியாக உள்ளது.வினாடிக்கு 3,225 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications