ஈராக் விவகாரம்: நேடோஅமைப்பில் பெரும் பிளவு
வாஷிங்டன்:
ஈராக்கைத் தாக்க உலகளவில் அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்புக்கு ஐரோப்பாவில் ஜெர்மன்தலைமை தாங்கி வருகிறது.
இது தொடர்பாக நேடோ நாடுகள் அமைப்பில் பிளவும் ஏற்பட்டுள்ளது.
ஈராக்கைத் தாக்க உதவும்பட்சத்தில் நாங்கள் தாக்கப்படலாம் என துருக்கி கூறியுள்ளது. அமெரிக்கா விமானப் படையினரை தன்நாட்டில் தங்க வைத்துள்ள துருக்கி நேடோ அமைப்பில் உள்ளது. இதனால் துருக்கிக்கு ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களைஅனுப்ப நேடோ அமைப்பிடம் அமெரிக்கா பரிந்துரைத்தது.
ஆனால், துருக்கிக்கு அந்த ஆயுதங்களை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என ஜெர்மன் கூறிவிட்டது. ஜெர்மனிக்குபிரான்சும், பெல்ஜியமும் ஆதரவு தந்துள்ளன. இதனால் அமெரிக்காவின பரிந்துரைகளை பிரான்ஸ் தனது வீடோ அதிகாரத்தைவைத்து ரத்து செய்துவிட்டது.
இதையடுத்து நேடோ நாடுகள் இடையே பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பிளவு ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும்முயற்சிகளில் அமெரிக்காவின் ஆதரவாளரான பிரிட்டன் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே ஈராக்கின் விமான எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைச் செலுத்தும் தளங்கள் மீது அமெரிக்க- பிரிட்டன்கூட்டுப் படைகளின் விமானங்கள் தாக்கின. குவைத்தில் உள்ள விமான தளங்களில் இருந்து புறப்பட்டுச் சென்ற இந்தவிமானங்கள் இரண்டாவது நாளாக இத் தாக்குதலை நடத்தியுள்ளன.
ஈராக்கின் பசாரா நகர் அருகே உள்ள தரையிலிருந்து தரை இலக்கைத் தாக்கும் ஏவுகணைத் தளங்களையும் இந்த விமானங்கள்தாக்கின.
இந் நிலையில் தங்களது விசாரணைகளிக்கு ஈராக் நல்லமுறையில் ஒத்துழைப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின்ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நாவின் தடைகளையும் மீறி ஈராக் அணு, ரசாயன, உயிரியல் ஆயுதங்களைத் தயாரித்து வருவதாகக் கூறித் தான் இப்போது அந்நாட்டைத் தாக்க அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டே பொய்யானது என ஈராக் கூறுகிறது.
இது தொடர்பாக ஹான்ஸ் பிலிக்ஸ் தலைமையிலான ஐ.நா. விஞ்ஞானிகள் குழு கடந்த பல மாதங்களாக ஈராக்கில் ஆய்வு நடத்திவருகின்றன. மேலும் சர்வதேச அணு சக்திக் கமிஷனின் தலைவர் அல்பராடாயும் இக் குழுவில் உள்ளார்.
இந்த இருவரும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் அறிக்கையை சமர்பித்து வருகின்றனர். தங்களது ஆய்வுகளுக்கு மேலும் காலநீட்டிப்பு தர வேண்டும் என்று இவர்கள் கோரியுள்ளனர்.
ஆனால், கால நீட்டிப்பு தர முடியாது என அமெரிக்கா கூறுகிறது. இதை ஏற்க மற்ற நாடுகள் தயாராக இல்லை.
ஐ.நா. ஆய்வுக் குழுவுக்கு போதிய கால அவகாசம் தந்துவிட்டு அவர்கள் தரும் இறுதி அறிக்கைக்குப் பிறகு தான்தேவைப்பட்டால் ஈராக்கைத் தாக்கலாம், அந்தத் தாக்குதலுக்கும் கூட ஐ.நா. பாதுகாப்பு சபையின் அனுமதியை அமெரிக்கா பெறவேண்டும் என அனைத்து நாடுகளும் கூறியுள்ளன.
இதற்கிடையே ஈராக் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்காவிட்டால் ஐக்கிய நாடுகள் சபை என்று ஒன்று இருப்பதே வேஸ்ட் எனஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு ஆஸ்திரேயா முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இப்போது வளைகுடாவில் அமெரிக்கப் படைகள் மட்டும் 1.5லட்சம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர பிரிட்டிஷ் படைகளும் உள்ளன. ஆஸ்திரேலியப் படைகளும் வர உள்ளன.
குவைத்தில் மட்டும் 70,000 அமெரிக்க- பிரிட்டன் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர். ஈராக்கைத் தாக்கும் முன் அங்கு 2.5 லட்சம்படையினரைக் குவிக்கத் திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.
-->












Click it and Unblock the Notifications