""நான் எழுதியது போல போலி கடிதம் வெளியிட்டார் கருணாநிதி"": ஜெ. கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மீது புகார் தெரிவித்து அப்போதைய பிரதமரான ராஜிவ் காந்திக்கு நான்எழுதியதைப் போலவே ஒரு கடிதத்தை முன்னாள் முதல்வரான கருணாநிதிதான் பத்திரிக்கையில் கொடுத்துவெளியிடச் செய்தார் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சமீபத்தில் கூடிய சட்டசபை கூட்டத் தொடரின்போது, "சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள கருணாநிதி வராததுஏன்? கூட்டத்திற்கு வந்த அவருடைய மகன் ஸ்டாலின் ஓடி ஒளிவது ஏன்?" என்பது உள்ளிட்ட கேள்வி மேல்கேள்விகளாகக் கேட்டிருந்தார் ஜெயலலிதா.

கருணாநிதியின் கேள்விகள்:

இதைத் தொடர்ந்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,

எம்.ஜி.ஆர். தன்னையும், தன் வளர்ச்சியையும் கண்டு பொறாமைப்படுவதாக ராஜிவ் காந்திக்கு தன் கைப்படவேஜெயலலிதா ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் "தி ஹிந்து", "இந்தியன் எக்ஸ்பிரஸ்" போன்ற பத்திரிக்கைகளிலும்வெளியிடப்பட்டிருந்தது உண்டா, இல்லையா?

ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த பத்மநாபா உள்ளிட்ட 10 பேர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டஇரண்டாவது மாதத்திலேயே புலிகள் இப்போதெல்லாம் சரியாகி விட்டதாகவும், மத்திய அரசும் தமிழக மக்களும்அவர்களுக்கு அனைத்து வழியிலும் உதவ வேண்டும் என்று ஜெயலலிதா கூறியது உண்டா, இல்லையா?

கடந்த சில நாட்களாகத்தான் என்னைப் பற்றி ஜெயலலிதா கேள்விகளாகக் கேட்டு வருகிறார். ஆனால் கடந்தநான்கு ஆண்டுகளாக நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் எங்கே?

முதலில் இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஜெயலலிதா பதில் கூறட்டும். அதன் பின்னர் அவருடையகேள்விகளுக்கெல்லாம் நான் விளக்கமாக பதில் சொல்கிறேன்" என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியிருந்தார்.

ஜெ. பதிலடி:

இந்நிலையில் ஈரோட்டில் நேற்று ரூ.424.65 கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைத்த ஜெயலலிதா,பின்னர் விழாவில் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார். அவர் பேசுகையில்,

பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழக மக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு நான் செய்துவரும் பணிகளுக்கு எதிர்க் கட்சிகள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.

நான் கருணாநிதியிடம் கேட்டவை இரண்டு கேள்விகள்- ஒன்று, தனக்கு ஓட்டளித்த தொகுதி மக்களுக்கு ஆற்றவேண்டிய ஜனநாயகக் கடமையைச் செய்யாமல் இருக்கிறாரே கருணாநிதி, அவர் ஏன் சட்டசபைக்குவருவதில்லை?

இரண்டு, தன்னுடைய வாரிசு என்று அவராலேயே அடையாளம் காட்டப்பட்ட ஸ்டாலினும் சட்டசபைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. திமுகவின் தளபதி என்று அழைக்கப்படும் ஸ்டாலின், ஏன் பதுங்கி, ஒதுங்கிபயந்தோடுகிறார்?

"கீறல் விழுந்த ரெக்கார்டு":

என்னுடைய இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாத கருணாநிதி, சம்பந்தமே இல்லாமல் தன்பங்கிற்கு இரண்டு கேள்விகளைக் கேட்டுள்ளார். இந்தக் கேள்விகளைக் கேட்டால் நான் வாயடைத்துப்போய்விடுவேன் என்று தானாகவே அவர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்.

கீறல் விழுந்த கிராமபோன் ரெக்கார்டைப் போல திரும்பத் திரும்ப கேட்கும் இந்த அபத்தமான கேள்விகளுக்குப்பதிலளிக்க வேண்டாம் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

போலி கடிதம்:

ஆனால் இப்போது சொல்கிறேன். எம்.ஜி.ஆர். குறித்து அப்படி ஒரு கடிதத்தை நான் ராஜிவுக்கு எழுதவே இல்லை.நான் எழுதியது போலவே கருணாநிதிதான் அப்படி ஒரு கடிதத்தைத் தயாரித்து, அதைப் பத்திரிக்கைகளுக்கும்கொடுத்து வெளியிடச் செய்துள்ளார்.

பலமுறை அந்தப் போலிக் கடிதம் பத்திரிக்கைகளில் வெளி வந்ததற்கும் கருணாநிதிதான் காரணம்.

கடந்த 1997ல் கருணாநிதி ஆட்சியிலிருந்த போது, ராஜிவைக் கொலை செய்த ஒற்றைக் கண் சிவராசன் மற்றும் தணுஆகியோர் என்னுடன் நிற்பது போல் போலிப் புகைப்படத்தை வெளியிட்டவரும் அவர்தான். இப்படி ராஜிவ்கொலை விவகாரத்தில் என்னைக் குற்றவாளியாக்க கருணாநிதி முயற்சித்தார். அதே போல்தான் இந்தக் கடிதமும்போலியானது.

புலிகளுக்கு ஆதரவு:

விடுதலைப்புலிகளை நான் ஆதரித்தது தொடர்பாக இரண்டாவது கேள்வியைக் கேட்டுள்ளார் கருணாநிதி. ராஜிவ்கொலைக்கு முன் நான் புலிகளை ஆதரித்தது உண்மைதான்.

இலங்கை தமிழர்களுக்காகப் போராடும் புலிகளை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே ஆதரித்தது என்பதுஅனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசும், மத்தியில் இந்திரா காந்திதலைமையிலான அரசும் கூட புலிகளை ஆதரித்தன.

அதே நிலையைத்தான் நான் பின்பற்றினேன். ஆனால் பத்மநாபா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தேன்.இருந்தாலும் அப்போது எங்கள் கட்சியில் இருந்த தலைவர்கள் அனைவரும் புலிகளை ஆதரிக்க வேண்டும் என்றுஎன்னை வற்புறுத்தினர். அந்த நிர்ப்பந்தத்தினால் நானே விரும்பாமல்தான் ஆதரித்தேன்.

ஆனால் ராஜிவ் கொலை செய்யப்பட்ட பின்னர் புலிகளை எந்தக் காலகட்டத்திலும் நான் ஆதரிக்கவே இல்லை.எங்கள் கட்சியும் புலிகள் எதிர்ப்பை இன்றுவரை கடைப்பிடித்துக் கொண்டுதான் உள்ளது.

புலிகள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் ஆரம்பத்தில் மத்திய அரசை வலியுறுத்தினேன். தடைவிதிக்கப்பட்டது. அந்தத் தடை தொடர வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியும் வருகிறேன்.கருணாநிதியைப் போல் நிமிஷத்திற்கு நிமிஷம் வேஷம் போடுவதில்லை.

நான் கேட்ட கேள்விகளுக்கும் கருணாநிதி கேட்ட இந்தக் கேள்விகளுக்கும் எந்த சம்மந்தமாவது உண்டா?மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்.

நான் கேட்ட கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்கு கருணாநிதி பதில் சொல்லட்டும் என்றார்ஜெயலலிதா.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+