பெண் நீதிபதியை கண்டித்து தமிழகத்தில் நாளை வக்கீல்கள் போராட்டம்
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி நீதிமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் பெண் நீதிபதி விஜயலட்சுமியின்செயல்பாடுகளைக் கண்டித்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநில வக்கீல்கள் நாளை ஒரு நாள் நீதிமன்றப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
பூதப்பாண்டி நீதிமன்றத்தில் சமீபத்தில் பெரும் மோதல் நடந்தது. அப்போது தன்னை சில வக்கீல்கள்தாக்கியதாகவும், கெட்ட வார்த்தையால் திட்டியதாகவும், தன் அலுவலகத்தில் உள்ள பொருட்களைசேதப்படுத்தியதாகவும் நீதிபதி விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் நாகர்கோவில் வக்கீல்கள் சங்கத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் 250 வக்கீல்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோட்டில் நடந்த அனைத்து வக்கீல்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போதுநீதிபதி விஜயலட்சுமியின் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி விஜயலட்சுமி மீது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் நீதிபதி விஜயலட்சுமியைக் கண்டித்து நாளை ஒரு நாள் அடையாள நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம்நடத்துவது என்றும் அனைத்து வக்கீல்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications