ஊட்டி, குன்னூரில் 427 திருட்டு வி.சி.டிக்கள் பறிமுதல்
ஊட்டி:
ஊட்டி மற்றும் குன்னூரில் உள்ள வீடியோ கடைகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளில் 427 திருட்டுவி.சி.டிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சமீபத்தில் வெளியான திரைப்படங்களின் வி.சி.டிக்களின் நடமாட்டம் ஊட்டியில் அதிகரித்திருப்பதாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஊட்டியில் உள்ள இரண்டு கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 81 திருட்டுவி.சி.டிக்களைக் கைப்பற்றினர்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் இந்தத் திருட்டு வி.சி.டிக்களை உலவ விட்ட அந்த இரண்டு வீடியோகடைக்காரர்களையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஊட்டியில் இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது இதுதான் முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் குன்னூரில் நடந்த மற்றொரு சோதனையில் 346 தமிழ், இந்தி மற்றும் ஆங்கில திருட்டு வி.சி.டிக்கள்கைப்பற்றப்பட்டன.
11,900 பாட்டில் சாராயம் அழிப்பு:
இதற்கிடையே கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கைப்பற்றப்பட்ட சுமார் 11,900பாட்டில் சாராயத்தை போலீசார் அழித்தனர்.
கடந்த 1996ம் ஆண்டு கர்நாடகா மற்றும் கேரளாவுக்குக் கடத்தப்படவிருந்த இந்த சாராய பாட்டில்களைப்பொள்ளாச்சி அருகே உள்ள சோழப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு கிட்டங்கியில் போலீசார் கைப்பற்றினர்.
ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதனால் அந்த பாட்டில்களில் உள்ள சாராயம் விஷத் தன்மையாக மாறிவிடும் என்ற அபாயம் இருப்பதால்,எச்சரிக்கையுடன் அதை அழித்து விட்டு காலியான பாட்டில்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு பொள்ளாச்சிநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்திற்குப் பின்புறம் பெரிய குழியைத் தோண்டி, அதில் 11,900பாட்டில் சாராயத்தையும் போலீசார் ஊற்றி அழித்தனர். இந்த சாராயத்தின் மதிப்பு சுமார் ரூ.15.5 லட்சமாகும்.பின்னர் காலி பாட்டில்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications