For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள போலீஸ் தாக்குதல்: ஈரோட்டில் 20ம் தேதி பந்த்

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

கேரள மாநிலம் முக்காலியில் தமிழக விவசாயிகள் மற்றும் பத்திரிக்கை நிருபர்களைத் தாக்கியஅம்மாநிலப் போலீசாரைக் கண்டித்து வரும் 20ம் தேதி ஈரோட்டில் பந்த் நடத்த கொங்கு இளைஞர்பேரவை முடிவு செய்துள்ளது. இதற்கிடையே இன்று கோயம்புத்தூரில் நிருபர்கள் போராட்டம்நடத்தினர்.

பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணையைப் பார்வையிடச் சென்ற தமிழகவிவசாயிகளையும், பத்திரிக்கை நிருபர்களையும் கேரள போலீசாரும் ரெளடிகளும் உருட்டுக்கட்டைகளால் மிகவும் கடுமையாகத் தாக்கினர்.

பத்திரிக்கை புகைப்படக்காரர்களின் காமிராக்களிலிருந்த பிலிம்களை உருவிக் கொண்ட போலீசார்,டி.வி. காமிராமேன்களிடமிருந்து வீடியோ கேசட்டுகளையும் பறித்துக் கொண்டனர்.

இந்தத் தாக்குதலில் தமிழகத்தின் 15 நிருபர்களும், ஐந்து விவசாயிகளும் படுகாயம் அடைந்தனர்.இதையடுத்து தாக்குதல் நடத்திய கேரள போலீசார் மீதும், அவர்களுக்கு உதவிய ரெளடிகள்உள்ளிட்ட 60 பேர் மீதும் தமிழக போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக விவசாயிகள் மற்றும் நிருபர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து வரும் 20ம் தேதிஈரோட்டில் பந்த் நடத்த கொங்கு இளைஞர் பேரவை அழைப்பு விடுத்துள்ள தாக கொங்கு இளைஞர்பேரவையின் செயலாளர் குமார ரவிகுமார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று கோயம்புத்தூரில் நிருபர்களிடம் கூறுகையில்,

கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சியினரும் இந்த பந்த் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். அதேபோல் வணிகர் சங்கங்கள், பஸ்-லாரி உரிமையாளர் சங்கங்கள் ஆகியோரும்இந்த பந்த் வெற்றி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அதே தேதியிலேயே கோயம்புத்தூரிலும் பந்த் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் 21ம்தேதி கோயம்புத்தூருக்கு ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வரவிருப்பதையொட்டி,அங்கு வேறொரு தேதியில் பந்த் நடத்தப்படும்.

கோவையில் நிருபர்கள் ஊர்வலம்:

இதற்கிடையே விவசாயிகள் மற்றும் நிருபர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோயம்புத்தூரில்இன்று சுமார் 130 பத்திரிக்கையாளர்கள் ஊர்வலம் நடத்தினர்.

சட்டைகளில் கறுப்பு பேட்ஜுகளுடன் ஊர்வலத்தில் நடந்து கொண்ட அவர்கள், கேரளபோலீசாருக்கும், அரசுக்கும் எதிராக "முடக்காதே, முடக்காதே, பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்காதே"என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர்.

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி இந்த ஊர்வலம் நடைபெற்றது. பின்னர்கலெக்டரிடம் இது தொடர்பான ஒரு மனுவை நிருபர்கள் கொடுத்தனர். தமிழக முதல்வர்ஜெயலலிதாவுக்கு அவர்கள் எழுதியுள்ள அந்த மனுவில்,

தமிழக விவசாயிகள் மற்றும் நிருபர்கள் மீதான இந்த மோசமான தாக்குதலை நடத்திய கேரளபோலீசார் மீதும் உள்ளூர் ரெளடிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தை மனித உரிமை கமிஷன், இந்திய பத்திரிக்கை கவுன்சில்ஆகியவற்றிலும் தமிழக அரசு சார்பாக புகார் கொடுக்க வேண்டும் என்று அம்மனுவில்கூறப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தில் கோயம்புத்தூரிலிருந்து செயல்படும் ஏராளமான மலையாளப்பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டு கேரள அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

"மத்திய போலீஸை நிறுத்த வேண்டும்":

இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற உத்தரவு சரியான முறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பதைக்கண்காணிக்கும் வகையில் முக்காலி பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை நிறுத்தப்பட வேண்டும்என்று மேட்டுப்பாளையத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக விவசாயிகள் மற்றும் நிருபர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் நேற்றுஇரவு அவசர அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் கேரள போலீஸாருக்கும், கேரள அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மார்ச் 6ம் தேதி வரை அணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க காவிரி நடுவர் மன்றம்உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கமத்திய ரிசர்வ் போலீஸ் படையை முக்காலியில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது.

வாசன், கண்ணப்பன் கண்டனம்:

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரான ஜி.கே. வாசன் மற்றும் மதிமுகபொருளாளரும், மத்திய அமைச்சருமான கண்ணப்பனும் நிருபர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக்கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்காலியில் அணை கட்டும் பணியைப் பார்வையிடச்சென்ற பத்திக்கையாளர்கள், விவசாயிகளை கேரள போலீஸார் தாக்கியது நாகரீகமற்ற செயல். இதுதொடர்பாக தவறு செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பவானி அணைப் பிரச்சினை தொடர்பாக கேரள காங்கிரஸ் தலைவர்களை தமிழக காங்கிரஸ் குழுவிரைவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறியுள்ளார் வாசன்.

கண்ணப்பன் தெரிவிக்கையில், தேவையில்லாமல் பிரச்சினையை வளர்த்து வருகிறது கேரள அரசு.தமிழக விவசாயிகள், பத்திக்கையாளர்கள் மீது கேரளபோலீஸார் தாக்குதல் நடத்தியுள்ளதுகாட்டுமிராண்டித்தனமானது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள அரசை தமிழக அரசுநிர்ப்பந்திக்க வேண்டும் என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்வரதராஜன் அறிக்கையொன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X