ஊட்டி மாதிரி மாறப்போகும் சென்னை.. வானிலையில் நடந்த மேஜிக்! வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் தற்போது மழை தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையில் மழையின் தாக்கம் இருக்கும் என்றும், இதன் காரணமாக வெப்பநிலை பரவலாக குறையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "சென்னை நகரை நோக்கி மேலும் பல மேகங்கள் நகர்ந்து வருகின்றன. கடும் கத்திரி வெயில் காலத்தின் உச்சத்தில் கூட சென்னையின் வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாக உள்ளது. இது நம் அனைவருக்கும் ஒரு கனவு போன்ற நாள்!

சென்னை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. டெல்டா பகுதிகள் முதல் தென் தமிழ்நாடு வரையிலான இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன" என்று கூறியிருக்கிறார்.
பொதுவாக மே மாதத்தில் சென்னையின் வெப்பநிலை 40°C-ஐத் தாண்டி கொளுத்தும். ஆனால், தற்போது வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேகமூட்டம் அதிகரித்துள்ளது. இது சூரியக் கதிர்கள் நேரடியாகத் தரையைத் தாக்காமல் தடுத்து, வெப்பநிலையை பெருமளவு குறைத்துள்ளது.
சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை & புறநகர்: தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டெல்டா மாவட்டங்கள்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழகம்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு அதிகம்.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்திற்கான வானிலை நிலவரத்தை வெளியிட்டிருந்தது. அதில், மதியம் 1 மணி வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்திருக்கிறது.
அதேபோல விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கிளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவையில் லேசான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications