முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்பிரமணி நியமனம்.. தமிழகத்தை சேர்ந்தவர்
டெல்லி: நம் நாட்டின் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் அனில் சவுகான் செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் நம் நாட்டின் புதிய முப்படை தலைமை தளபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த என்எஸ் ராஜா சுப்பிரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

நம் நாட்டின் பாதுகாப்பு துறையில் மிகவும் உயரிய பதவியாக முப்படை தலைமை தளபதி (Chief of Defence Staff - CDS) என்பது தான் இருக்கிறது. இந்திய ராணுவம் , கடற்படை , விமானப்படை ஆகிய மூன்று படைகள் தான் நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன. இந்த படைகளுக்க தனித்தனியே தளபதிகள் இருப்பார்கள்.
ஆனால் இந்த 3 படைகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்பவர் தான் முப்படை தலைமை தளபதி. நம் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை ராணுவ ஆலோசகராகவும், முப்படைகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் பொறுப்பையும் இவர் மேற்கொண்டு வருவார்.
நம் நாட்டில் இதுவரை 2 பேர் தான் முப்படை தலைமை தளபதியாக செயல்பட்டுள்ளனர். ஒன்று பிபின் ராவத், இவர் 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் 8 ம் தேதி வரை இருந்தார். அதன்பிறகு ஊட்டி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து இந்த பொறுப்பில் அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டார். இவர் 2022செப்டம்பர் 30 முதல் பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 30ம் தேதி முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் தான் முப்படைகளின் தலைமை தளபதியாக என்எஸ் ராஜா சுப்பிரமணி நியமனம் செய்ப்பட்டள்ளார். அனில் சவுகான் ஓய்வை தொடர்ந்து இவர் அந்த பொறுப்பில் செயல்பட உள்ளார்.
என்எஸ் சுப்பிரமணி தமிழகத்தை சேர்ந்தவர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து ராணுவத்தில் உயர் பதவிக்கு சென்றவர். ராணுவத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
2023 மார்ச் முதல் 2024 ஜூன வரை மத்திய கட்டளை மையத்தின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரியாக செயல்பட்டார். 2021 ஜூலை 1ம் தேதி முதல் ராணுவ துணை தளபதியாக செயல்பட்டு வந்தார். அதன்பிறகு இவர் கடந்த 2025 செப்டம்பர் மாதம் 1ம் தேதி தற்போது ராணுவ துறையின் ஆலோசகராகம், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது முப்படை ராணுவ தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications