பட்டாசுகளை இடுப்பில் கட்டிக் கொண்டு "வெடிகுண்டு" வைத்திருப்பதாக மிரட்டிய திருடன்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் தன் இடுப்பில் சாதாரண பட்டாசுகளைக் கட்டிக் கொண்டு, அவை வெடிகுண்டுகள்என்றும் அவற்றை வெடிக்க வைப்பேன் என்றும் மிரட்டிய ஒரு திருடனைப் பொதுக்கள் வளைத்துப்பிடித்து அடித்து நொறுக்கினர்.
கிருஷ்ணகிரியில் ராஜ்குமார் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த திருடன் அங்கிருந்தவர்களிடம்,"மரியாதையாக பீரோ சாவியைக் கொடுத்து விடுங்கள். நான் என் இடுப்பு பெல்ட்டில் பயங்கரவெடிகுண்டுகளை மாட்டியுள்ளேன். பட்டனை அமுக்கினால் நீங்களும், நானும், இந்த வீடும் சிதறிப்போய்விடும்" என்று மிரட்டியுள்ளான்.
இதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் பயந்து போய், அவனைக் கீழே தள்ளிவிட்டு வெளியே வந்துஅலறியுள்ளனர். இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்களும், எதிர் வீட்டுக்காரர்களும் அந்தவீட்டுக்குள் பதறியடித்த படி போய்ப் பார்த்துள்ளனர்.
அங்கு அந்த வீட்டுக்காரர்களை மிரட்டிக் கொண்டிருந்த திருடனைப் பார்த்ததும் அவனைச் சுற்றிவளைத்தனர். ஆனாலும் அவன் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருந்தானே தவிர, "வெடிகுண்டை"வெடிக்கச் செய்யவே இல்லை.
இதனால் அவன் பொய் சொல்கிறான் என்பதைத் தெரிந்து கொண்ட மக்கள், அவனைச்சராமாரியாக அடித்துத் துவைத்து எடுத்தனர். இதையடுத்து அந்தத் திருடன் பயந்து போய் ஓடஆரம்பித்தான்.
ஆனாலும் ஓடுவதற்கே வழியில்லாமல் அவனைச் சுற்றி வளைத்துக் கொண்ட மக்கள் அவனுக்குத்தர்ம அடி கொடுத்தனர். அடி தாங்க முடியாமல் அந்தத் திருடன் மயங்கிக் கீழே விழுந்தான்.
அதன் பின்னர் அவனைச் சோதித்துப் பார்த்தபோது, தன் இடுப்பில் தீபாவளிக்கு வெடிக்கும் வெறும்பட்டாசுகளைத்தான் கட்டியிருந்தான் என்பது தெரிய வந்தது.
இதற்குள் போலீசாருக்குத் தகவல் செல்லவே, அவர்களும் விரைந்து வந்து சேர்ந்தனர். மயங்கியநிலையில் கிடந்த திருடனை அவர்கள் மக்களிடமிருந்து மீட்டு மருத்தவமனையில் சேர்த்தனர்.
இந்தச் சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications