ஜெ. சொத்து குவிப்பு: விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் அன்பழகன் கூடுதல் மனு
டெல்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை தனி நீதிமன்றம் விசாரிக்கஇடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக பொதுச்செயலாளரான அன்பழகன் கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது சென்னையில்உள்ள தனி நீதிமன்றத்தில் திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது. அரசு தரப்பின் கடைசிசாட்சியமான போலீஸ் அதிகாரி நல்லம்மநாயுடு சாட்சியம் அளித்து வருகிறார்.
இதற்கிடையே, தற்போது ஜெயலலிதாவே முதல்வராக இருப்பதால் அரசு தரப்பு சாட்சியங்களைக்கலைக்கக் கூடும் என்பதால் இவ்விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிஅன்பழகன் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை வரும் 28ம் தேதி நடைபெற்றவுள்ளது. இந்நிலையில் நேற்று கூடுதல்மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் அன்பழகன். அம்மனுவில்,
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தனி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இவ்வழக்கில் வாதாடி வரும் அரசு தரப்பு வழக்கறிஞர் 80 சாட்சிகளை மீண்டும் குறுக்குவிசாரணைக்காக அழைத்துள்ளார். ஆனால் கடந்த 2000வது ஆண்டிலேயே அவர்கள் அனைவரும்சாட்சியம் அளித்து விட்டனர்.
மேலும் கடந்த 11ம் தேதி சாட்சியம் அளித்த விசாரணை அதிகாரி நல்லம்மநாயுடு, லஞ்ச ஒழிப்புத்துறை தனக்கு சரியான ஒத்துழைப்பு தருவது இல்லை என்று குறிப்பிட்டார்.
இந்தத் துறை அடங்கிய உள்துறை தற்போது ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எனவேஇவ்வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்.
சாட்சிக்காக மீண்டும் அழைக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகமாறியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் இவ்வழக்கின் விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகம்எழுந்துள்ளது. எனவே இவ்விசாரணையை தமிழகத்தை விட்டு வேறு எந்த மாநிலத்திற்காவது மாற்றவேண்டும்.
அதுவரை இந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடையும் விதிக்க வேண்டும்என்று அம்மனுவில் அன்பழகன் கூறியுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications