பாண்டிச்சேரியில் அரவிந்த் கண் மருத்துவமனை
மதுரை:
மதுரையின் புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை வரும் 21ம் தேதி முதல் பாண்டிச்சேரியிலும்செயல்படப் போகிறது.
மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கண்நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
தமிழகம் மட்டுமில்லாமல் தென்னிந்திய மாநிலங்களிலுமிருந்தும் இங்கு வந்து ஏராளமான கண்நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். கண்புரை உள்ளிட்ட பல முக்கியமான அறுவைச்சிகிச்சைகளும் இங்கு வெற்றிகரமாக நடக்கின்றன.
இந்நிலையில் பாண்டிச்சேரியிலும் தன் கிளையை அமைத்துள்ளது அரவிந்த் கண் மருத்துவமனை.வரும் 21ம் தேதி ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்த மருத்துவமனையைத் திறந்துவைக்கிறார்.
மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் எவ்வளவு வசதிகள் உள்ளனவோ அவைஅனைத்தும் இந்த பாண்டிச்சேரி மருத்துவமனையிலும் செய்யப்பட்டுள்ளன.
நோயாளிகளுக்காக இங்கு 750 படுக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 600 படுக்கைகளில்நோயாளிகள் தங்கி இலவசமாகவே சிகிச்சை பெற்றுச் செல்லலாம்.
ரூ.23 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையால் பாண்டிச்சேரி தவிர,தமிழகத்தின் கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச்சேர்ந்த சுமார் 1.5 கோடி மக்கள் பயன்பெறவுள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் இங்கு சுமார் 1.5 லட்சம் பேர் புற நோயாளிகளாகவும், சுமார் 18,000 பேர்உள் நோயாளிகளாவும் சிகிச்சை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications