டெலிபோன் கட்டண உயர்வை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்
சென்னை:
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொலைபேசிக் கட்டணங்கள் உயரவிருப்பதைக் கண்டித்துசென்னையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தனியார் செல்போன் நிறுவனங்கள் கட்டணங்களை வெகுவாகக் குறைத்து விட்டதைத் தொடர்ந்துமத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனமும் கட்டணத்தைக்குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில், டெலிபோன் கட்டணங்களை உயர்த்தமத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் எஸ்.டி.டி. கட்டணங்கள் கடுமையாகஉயர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் இப்போதேதங்களது இணைப்புகளைத் திருப்பிக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதைக் கண்ட தொலைபேசித் துறை ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். இவ்வாறு பொதுமக்கள்அனைவரும் தங்களுடைய தொலைபேசி இணைப்புகளைத் திருப்பிக் கொடுத்தால், முடிவில்தங்களது வேலையும் பறிபோய் விடுமே என்று அவர்கள் அஞ்சத் தொடங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தொலைபேசி கட்டண உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தபி.எஸ்.என்.எல். ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி சென்னையில் கடந்த 15ம் தேதிசென்னை-வள்ளுவர் கோட்டத்தில் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்றும் சென்னையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.புரசைவாக்கத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் மற்றும் அண்ணா சாலைதொலைபேசி அலுவலகம் ஆகியவற்றிற்கு முன்பாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தொலைபேசிக் கட்டணஉயர்வுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர்.
அடுத்தகட்டமாக வரும் மார்ச் 6ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்என்று சி.ஐ.டி.யூ. சங்கத்தின் செயலாளரான செளந்தரராஜன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தொலைபேசிக் கட்டண உயர்வு குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என்று மத்திய தகவல்தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சரான திருநாவுக்கரசர் சமீபத்தில்தெரிவித்துள்ளது நினைவுகூறத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications