For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாத்தான்குளத்தில் அதிமுகவினர், ரெளடிகள் வெறித் தாக்குதல்: நாசரேத்தில் பந்த்- மக்கள் உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

நாசரேத்:

சாத்தான்குளம் தொகுதியில் உள்ள நாசரேத் பகுதி காங்கிரஸ் அலுவலகத்தையும் அருகில் இருந்தகடைகளையும் அதிமுகவினரும் ரெளடிகளும் சூறையாடினர். இதைக் கண்டித்து நாசரேத்தில் இன்றுபந்த் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று நாசரேத் பகுதியில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில்இங்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் அதிமுகவினரின் வெறியாட்டத்தைக் கண்டித்துஉண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

பந்த்தையொட்டி இப் பகுதியில் கடைகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அங்குபெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதா இங்கு பிரச்சாரம் செய்ய வருவாரா என்றுசந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி அதிமுகவினர் மதுரை, தேனி, ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வந்துஇறக்கியுள்ள குண்டர்படை சாத்தான்குளத்தையே கலங்கடித்து வருகிறது. தொகுதியில் இவர்களைக்கண்டாலே பயந்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் அதிமுகவினரின் உதவியுடன் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு அசைவ உணவுகளும், மதுபானங்களும் வழங்கப்படுகின்றன.

மதமாற்றத் தடைச் சட்டத்தால் இத் தொகுதியில் கிருஸ்துவ நாடார் இனத்தினர் காங்கிரசுக்குத் தான்வாக்களிப்பர் என்பது உறுதியாகிவிட்டகால் தேர்தல் நாளன்று இவர்களைக் கொண்டு அராஜகம்செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது.

இந் நிலையில் நேற்றிரவு நாசரேத் பஸ் நிலையம் அருகே பெட்ரோல் பங்கை ஒட்டிஅமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்துக்கு அதிமுகவினரும் வெளியூர்களில் இருந்துவந்துள்ள ரெளடிகளும் வந்தனர்.

இந்த இடத்தில் தான் நாங்களும் தேர்தல் அலுவலகம் வைப்போம் என்று கூற இரு தரப்பினருக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வேலை பார்த்துவரும் மதிமுக இளைஞரணி பொதுச் செயாலாளர் மாமல்லன் தலைமைலான வைகோவின்தொண்டர்கள் அங்கு வந்து அதிமுகவினரை எதிர்த்தனர்.

அப்போது தமிழ் மாநில மூப்பனார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. குமாரதாஸ்தலைமையில் 100 பேர் அங்கு வந்து அதிமுகவினருக்கு ஆதரவாகப் பேசினர்.

இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கூடியதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வாடா போடா என வாக்குவாதம் முயற்றியது.

போலீசார் கண்டும்காணாதது போல ஓரமாக நின்று கொள்ளவே காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தைஅதிமுகவினரும் ரெளடிகளும் குமாரதாசின் ஆதரவாளர்களும் தாக்க ஆரம்பித்தனர். அங்கிருந்தகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெரிய படத்தையும் தாக்கி சேதப்படுத்தினர். இதைஎதிர்த்த காங்கிரசாருக்கும் மதிமுகவினருக்கும் அடி விழுந்தது.

இதில் மதிமுகவைச் சேர்ந்த மாமல்லனின் மண்டை உடைந்தது. இதையடுத்து காங்கிரசார் திருப்பித்தாக்கினர். இதையடுத்து அதிமுகவினருடன் வந்த ரெளடிகள் அருகில் இருந்த கடைகளை அடித்துஉடைக்க ஆரம்பித்தனர். ஒரு டீக் கடையை உடைத்து உள்ளே நுழைந்து பாய்லரைப் போட்டுஉடைத்தனர்.

தொகுதியில் அதிமுகவினருடன் வந்துள்ள ரெளடிகளின் நடமாட்டத்தால் ஏற்கனவே எரிச்சலில்இருக்கும் இப் பகுதி மக்கள், தங்களது கடைகள் தாக்கப்பட்டதால் கொதித்தெழுந்தனர். உடனே அப்பகுதியினர் நள்ளிரவு 1 மணிக்கு நாரசேத் பகுசியில் உள்ள புனித யோவான் ஆலயத்தின் மணியைஅடித்தனர்.

அவசர காலத்தில் தான் இது போன்று மணி அடிக்கப்படும். மணி ஓசையைக் கேட்டுஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவிலும் அங்கு கூட ஆரம்பித்தனர். இதையடுத்து அதிமுகவினரும்ரெளடிக் கும்பல்களும் அங்கிருந்து ஓடிவிட்டன.

இரவில் அங்கு கூடிய மக்கள் கடைகள் சூறையாடப்பட்ட விஷயம் அறிந்து மறுநாள் (இன்று) பந்த்நடத்த முடிவு செய்தனர்.

இந்த பந்துக்கு நாசரேத் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஆதரவு கிடைத்தது. அங்கு கடைகள்,பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. சாலைகளில் வாகனங்களும் ஓடவில்லை.

மேலும், அதிமுகவினரின் அராஜகத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டமும்நடத்தினர்.

ஜெ. பிரச்சாரம் ரத்தாகுமா?

இந் நிலையில் சாத்தான்குளத்தில் இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா இன்றுநாசரேத்துக்கும் செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், தனக்கு எதிராக பந்த், உண்ணாவிரதம் நடந்து வரும்நிலையில் அப் பகுதிக்கு ஜெயலலிதா செல்வாரா என்று தெரியவில்லை.

நேற்று மாலை அழகப்பபுரத்தில் தொடங்கி 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவர் பிரசாரம் செய்தார். இதில்,கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள கிராமங்களை தவிர்த்த ஜெயலலிதா தாழ்த்தப்பட்டவர்கள், பிற சமூகத்தினர் அதிகம்உள்ள கிராமங்களில் பெரும்பாலும் பிரசாரம் செய்தார்.

இன்றும் கிட்டத்தட்ட 30 கிராமங்கள் வரை ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.

நாசரேத் பகுதியில் பதற்றம் நிலவுவதால் அந்தப் பகுதியில் தற்போதைக்கு முதல்வர் பிரசாரத்திற்கு செல்ல மாட்டார்என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் தொண்டருக்கு வெட்டு:

இதற்கிடையே தாக்கப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் இன்று காலைபார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இது தொடர்பாக மத்தியப் பார்வையாளர்களிடம் புகார் கொடுத்துள்ளேன். ஒரு காங்கிரஸ் தொண்டரையும் வெட்டிப் போட்டுள்ளனர்.

எனவே சாத்தான்குளம் தொகுதியில் மத்தியப் பாதுகாப்புப் படையினரை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த வன்முறைகள்தொடரும் என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளேன் என சோ.பா. கூறினார்.

இத் தொகுதிக்கே சம்பந்தம் இல்லாத சமூக விரோதிகளை அதிமுகவினர் ஆயிரக்கணக்கில் கொண்டு வந்துள்ளதாக காங்கிரஸ்செயல் தலைவர் இளங்கோவன் கூறி வருகிறார். இவர்கள் மூலம் வன்முறை நடத்தி தேர்தல் நாளான்று தொகுதி மக்கள்வாக்களிக்கவே வராத பய சூழலை ஏற்படுத்த அதிமுக முயல்வதாகக் கூறி வருகிறார்.

இந் நிலையில் நாசரேத் தாக்குதல் நடந்துள்ளது.

வி.ஏ.ஓ. சான்றிதழ் செல்லாது

இந் நிலையில் சாத்தான்குளம் இடைத் தேர்தலில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), குடிசை மாற்றுவாரியம் அதிகாரி ஆகியோர் தரும் அடையாள சான்றிதழ்களைக் காட்டி வாக்களிக்கும் முறையைத்தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டது.

இந்த ஆவணங்களை அதிமுகவினர் ஏராளமான அளவில் போலியாகத் தயாரித்து போலிவாக்காளர்களையும் உருவாக்கியது உறுதியானதால் தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கையைஎடுத்துள்ளது.

அதே போல இந்த ஆண்டு தபால் அலுவலகங்கள் அல்லது வங்கிகளில் சேமிப்பு கணக்குதுவக்கியவர்களும் அந்த பாஸ் புத்தகத்தைக் காட்டி வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X