சென்னையில் மீண்டும் ஹவாலா மோசடி: ரூ.50 லட்சம் பறிமுதல்- 2 பேர் கைது
சென்னை:
ரூ.50 ஹவாலா பணத்தை கடத்திச் சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த 2 பேரை சென்னையில்போலீஸார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீனிவாசுலு மற்றும் அப்துல்லா. இவர்கள் இருவரும்அமைந்தகரை மஜீத் தெருவில் உள்ள வீட்டில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று தோள் பை நிறைய ரூ.500, ரூ.100 நோட்டுக்கள் அடங்கிய ஹவாலாபணத்துடன்அவர்கள் ஹைதரபாத் செல்வதற்காகக் கிளம்பினர். அமைந்தகரையில் ஆட்டோ பிடித்தஅவர்கள் சென்டிரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையே இருவரும் ஹவாலா பணத்துடன் வருவது குறித்து மத்திய குற்றப் பிரிவுபோலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் விரைந்தனர். கீழ்ப்பாக்கம்போக்குவரத்து சிக்னல் அருகே ஒரு ஆட்டோவில் இரண்டு இளைஞர்கள் பையுடன் செல்வதுதெரிந்தது. இதையடுத்து அந்த ஆட்டோவை போலீசார் மடக்கினர்.
பின்னர் அந்த இளைஞர்கள் வைத்திருந்த பையை சோதித்துப் பார்த்தபோது அதில் பணம் இருந்ததுதெரிய வந்தது. இதையடுத்து இருவரிடமும் விசாரணை செய்தபோது, தாங்கள் குட்கா வியாபாரம்செய்வதாகவும், புதிதாக குளிர்பான நிறுவனம் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த இளைஞர்களுக்கு இந்தஹவாலா பணம் எப்படி வந்தது என்பது குறித்து அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.
சென்னையில் சமீபத்தில் ஹவாலா பணம் பிடிபடுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவேஇரண்டு இடங்களில் தலா ரூ.75 லட்சம் ஹவாலா பணம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications