இன்னொரு அயோத்தி: இம்முறை மத்தியப் பிரதேசத்தில்..
தர்: (மத்தியப் பிரதேசம்)
அயோத்தி விவகாரத்தைப் போலவே மத்தியப் பிரதேசத்திலும் ஒரு பிரச்சனை கிளப்பப்பட்டுள்ளது.
இங்கு பல ஆண்டு காலமாக மூடப்பட்டு கிடக்கும் ஒரு பிரச்சனைக்குரிய வழிபாட்டுத் தலத்தை இந்து ஜார்கன்மன்ச் மற்றும் பா.ஜ.கவின் சுதேசி ஜார்கன் மன்ச் அமைப்பினர் இன்று பூட்டுக்களை உடைத்து திறக்க முயன்றனர்.ஆனால், போலீசார் அவர்களைத் தடுத்து விரட்டியடித்தனர்.
இது தொடர்பாக 40 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில்இச் சம்பவம் நடந்துள்ளது.
இந்துக்களால் போஞ்ச்சாலா கோவில் என்றும் இஸ்லாமியர்களால் கமால மெளலா பள்ளிவாசல் என்றும் இந்தவழிபாட்டுக் தலம் அழைக்கப்படுகிறது. இது யாருக்குச் சொந்தம் என்பதில் பிரச்சனை இருப்பதால் இந்தத் தலம்பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று காலை பா.ஜ.கவின் சுதேசி ஜார்கன் மன்ச் மற்றும் இந்து ஜார்கன் மன்ச் ஆகியஅமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் தலத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்புக்குஇருந்த போலீசார் தடுத்தபோது அவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர்.
இதில் பல போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து போலீடார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தினரைகலைந்து ஓடச் செய்தனர்.
இச் சம்பவத்தையடுத்து இந்தத் தலத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு பெரும் அளவிலான போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று இந்தத் தலத்தைக் கைப்பற்றப் போவதாக இந்து ஜார்கன் மன்ச் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால்பெரும் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சத்தில் இந்த சிறிய நகரில் அனைத்துப் பள்ளிகளும் கல்லூரிகளும்மூடப்பட்டிருந்தன. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications